இடுகைகள்

ஆகஸ்ட், 2009 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இருள் - மெழுகுவர்த்தியிடம்

படம்
உன்னைக் கரைத்து உன் உடலை உருக்கி என்னை ஓளிரவைக்க அழுகிறாயே நீ என்ன என்றும் சுமை தாங்கும் கூலித்தொழிலாளியா?

கனவுகள் வாழ்கின்றன.

வாழ்க்கை - 1 தென்றல்காற்று முகத்தில் பட்டுத்தெறித்தது. கண்ணில் பட்ட இடமெங்கும் வெட்டவெளியாக வயல்வெளி பரவிக்கிடந்தது. தென்றலின் இனிய வாசத்தை அள்ளிச் சுவைத்தபடி மூக்கின்வழியே இழுத்து ஆசைதீர வாய்வழியே விட்டு வெளியனுப்பி அனுபவித்தேன். இதமான காலைப்பொழுதில் குளக்கட்டின் வழியே பொங்கிப் பிரவாகிக்கும் வயற்காற்று மருதமர இலைகளை அசைத்து நடனம் பயிற்றிக்கொண்டிருந்தது. நிறைமாதமாய் தளதளத்து முட்டிமோதியது குளத்துநீர். வான் பாய்ந்து அடங்கியதற்கான ஆதாரங்கள் அங்குமிங்குமாக உருக்குலைந்திருந்தன. மூன்றாண்டுகளின்பின் என் சொந்த மண்ணில்… நான் பிறந்து ஓடியுலாவிய என் சொர்க்கபூமியில் காலடி வைத்த ஆனந்தத்தில் வயிற்றுக்கும் தொண்டைக்கும் இடையில் நின்று பெரு நடனமாடியது இதயம். மூன்றாண்டுகள் நான் எப்பிடி இருந்தேன்… எங்கிருந்தேன்… என்பதெல்லாம் இப்போது எனக்குத் தேவையற்றதாகிப் போயிருந்தது. எந்த ஊர் என்றாலும் சொந்த ஊருக்கு நிகராக வராது என்ற உண்மையை இங்கு காலடியெடுத்து வைத்த இந்தக் கணத்தில் நான் உணரத் தலைப்பட்டேன். இப்போது என் உயிர்… மூச்சு… சுவாசம் எல்லாம் ஒன்று சேர்ந்து ‘செம்புலப் பெயல்நீராய்’ உருமாறக் கண்டேன். என் கைஇ கால்

காதலின் மொழி புரிந்தபோது

என் செல்ல சிங்காரியே உன் பின்னால் அலைந்து திரிந்த அந்தக் காலத்து அன்பான நினைவுகள் உள்மனதில் நின்று ஊமைக் காயமாய் வலிக்கிறது என் கண்ணுக்கும் கவி பாடத் தெரியும் என்ற வித்தையை சொல்லித் தந்தவளே மொழிகள் அற்ற உலகில் நாங்கள் தனித்தனி தீவுகளாக உலா வந்தபோது பேசமுடியாது தவித்த காதலின் மொழியை இப்போது உன்னோடு பகிர்ந்து கொள்வதில் எத்தனை இன்பமடி எனக்கு

காதல் கடிதம்

அன்பே உனக்கொரு காதல் கடிதம் எழுத எண்ணி மடித்துப் போட்ட வெற்றுத்தாளை விரித்து வைத்தும் எழுத முடியவில்லை உனக்கொரு கடிதம் என்னவளே விரித்து வைத்த வெற்றுத் தாளில் உன் முகவிம்பம் விழுந்து தொலைக்கிறதடி பேனாமுனை குத்தி காயப்படுத்த நான் விரும்பவில்லை.

மூன்று கவிதைகள்

இங்கு மூன்று கவிதைகள் பற்றிய தொகுப்பினை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன். உங்களின் கருத்துக்களினை முன்வையுங்கள். சங்ககாலத்தில் கடையேழு வள்ளல்களில் ஒருவனாகிய பாரி வஞ்சனையால் இறந்தபின்னர் பாரிமகளிரின் நிலைகண்டு எழுதப்பட்ட ஐந்து வரிகளில் அமைந்த கண்ணீர்க் காவியத்தின் தொடர்ச்சி இன்றுவரை நீண்டுகொண்டிக்கின்றது. " அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில் எந்தையுமுடையேம் எம் குன்றும் பிறர்கொளார் இற்றைத் திங்கள் இவ்வெண்ணிலவில் வென்றெறி முரசின் வேந்தர் எம் குன்றுங் கொண்டார் யாம் என்தையுமிலரே " (கலித்தொகை - முல்லை - 13) நீண்ட நெடிய தமிழ்க் கவிதைப் பாரம்பரியத்தின் தொடர்ச்சியாக வரும் இன்றைய கவிதைகளிலும் சங்க காலத்தின் சாயலைக் காணமுடிகின்றது. " அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவினில் அலையோர வெண்மணலில் நாம் பதித்த கால்த்தடங்கள் இல்லாத இடங்களில்லை. இற்றைத் திங்கள் அதே வெண்மணலில் என் கால்கள் தேடுகின்றன உன் தடங்களை…… ………………………… …………………………. " எனத் தொடர்கின்ற விஜயலட்சுமி சேகர் எழுதிய கவிதையில் சங்க காலத்து தொடர்ச்சியாக இன்றும் கவிதைகள் படைப்பதைக் காணமுடிகின்றது. காட்சிகள் மாறவில்லை. களங்கள்

இது கதையல்ல

சொந்த மண்ணின் பெருமைகளை சுவையுடனே சொல்ல என் நா எப்போதும் தடுத்ததில்லை கிட்டிப் புள்ளடித்து கிளித்தட்டு மறித்து எட்டியெட்டி நின்று கெந்தித்தொட்டு விளையாடி எம் செம்மண் பூமியிலே பட்டகதை சொல்லிடவா? கன்னியம்மன் கோயிலிலே காரிருள் பூசைவேளையிலே எம் சுட்டிப் பருவமதில் கள்ளன் பொலிஸ் விளையாடி விழுந்துடைபட்ட கதை சொல்லிடவா? அகதியாகி அல்லல் பட்டு அலைந்த போது அரை றாத்தல் பாணுக்கு அஞ்சு மணிநேரம் வரிசை கட்டி நின்ற சோகக்கதை சொல்லிடவா? புழுத்த பயற்றையும் உழுத்த உழுந்தையும் சோற்றுக் குதவாத அரிசியையும் அகதிக்கென்று தந்திடவே அதை கை கட்டி நின்று வாங்கியுண்ட கதை சொல்லிடவா? செம்மணி தாண்டி வந்து கிளாலிக் கரையினிலே மழை நீரை குடைபிடித்து மடிச்சீலை அதில் நனைத்து அடிநாக்கில் பிழிந்து விட்டு தாகம் தணித்த அந்த தவிப்புக் கதை சொல்லவா?

வண்ணத்துப் பூச்சிகள்

வண்ணத்துப் பூச்சிகள் அழகானவை பள்ளிப் பருவமதில் துள்ளித் திரிகையிலே அதன் சிறகினை ரசித்து சிறு நூலினில் முடித்து பெரு வானிலே விட்டு விளையாடியதாய் ஞாபகம்... முற்றிய மரக்கிளை வற்றிய குளக்கரை மூலை முடுக்கெல்லாம் வண்ணத்துப் பூச்சிகள் சித்திரை மாத பெரு வெயில் கடந்து கதிர்காம யாத்திரையின் பாதியிலே மூச்சிரைத்துயிர் விட்டதாக நினைவு... ஆனாலும் வண்ணத்துப் பூச்சிகள் அழகானவைதான்...

விடியலின் ராகம்

நெற்கதிர்கள் குனிந்து நின்று நிலம் பார்க்கும் வௌ்ளெலிகள் புற்றெடுத்து விளையாடும் பன்றியும் அகளானும் படையுடனே நடை பயிலும் நிறை குளம் பெருக்கெடுத்து அருவி பாயும் பாலியாறும் பறங்கியாறும் கைகோர்க்கும் ஊர் கூடியிருந்து உறவுடனே உண்டு மகிழ்ந்த எங்கள் அன்னை மடி முறுவலிக்கும் வற்றாப்பளை ஆச்சியும் பன்றித் தலைச்சியாளும் பங்குனியில் பொங்கலிடும் மாமாங்கேஸ்வரமும் மாவிட்டபுரமும் மறுபடியும் குதுகலிக்கும் கன்னியாயை காங்கேசன்துறை கரம் பிடிக்கும் கேதீச்சரமும் கோணேஸ்வரமும் கொடியேறும் வல்லை வெளியும் முல்லை மண்ணும் சங்கமிக்கும் மீன்பாடும் தேனாடும் திருமலை நகரதுவும் வன்னியுடன் கைகோர்க்கும் குருவிகள் மீண்டும் இசைமழை பொழிந்து குதுகலிக்கும் சேவல்கள் வாழ்த்த விடியலின் ராகம் எதிரொலிக்கும்.

சித்திரைத் தமிழ் மகள்

சித்திரைத் தமிழ் மகள் சிலிர்ப்புடன் வருகின்றாள் நித்திரை விட்டு விரைவினில் எழுந்திடுவோம்... மருத்துநீர் தலை தடவி வெந்நீரில் குளித்திடுவோம் நெற்றியில் நீறணிந்து நெறிப்படி வணங்கிடுவோம் பெரியோர் தாள் பணிந்து கையுறை பெற்றிடுவோம்... எப்போதும் போலவே அந்த நினைவுகள் வந்தெம் மனத்திரை ஊசலாடுகின்றன... முகமில்லா உருவங்களுக்கும் நிசப்தமான வார்த்தைகளுக்கும் உரிமை கொண்டாடியபடி நீண்டு கொண்டிருக்கிறது எம் இரவுகள்... சில்லறை வாங்கி உண்டியல் சேர்த்து உறவுகள் கூடி மருதடி சேர்ந்து மகிழ்ந்திருந்த அந்தக்காலம் மலையேறி விட்டது... அப்பு வன்னியிலே ஆச்சி வல்லையிலே தம்பி லண்டனிலே தவமிருந்து பெற்ற தனையன் சூரிச்சிலே... கொள்ளிக் குடமெடுக்க ஊரிலே யாருமில்லை இந்த லட்சணத்தில் வந்த வரிசத்தை ஆர் நினைப்பார் இந்த வேளையிலே... ஆனாலும் நித்திரை விட்டு விரைவாக எழுந்திடுவோம் அன்றேல்... நித்திரையின்றி விடியும்வரை விழித்திருப்போம்... சித்திரைத் தமிழ்மகள் சிலிர்ப்புடன் வருகிறாள் வாருங்கள் நாம் சோகங்கள் மறந்து சுமைகளை ஒருகணம் இறக்கி மகிழ

ஊழிக்கூத்து

பட்டிப் பசு முலை சுரந்து பால் சொரியும் தொட்டியடி தண்ணீரினால் நிலம் நனைக்கும் முற்றத்து பலாவினிலே குயிலினங்கள் கீதமிடும் குலையுடனே நுங்கிறக்கி இளநீரால் தாகம் போக்கி முற்றத்து நிலவினிலே கூடி மகிழ்ந்திருந்தோம்… மல்வத்து மாகாளி உக்கிரங் கொண்டு ஊழிக்கூத்து ஆடியவேளையில் அனல் பறந்தது… என் முற்றத்து பலாமரம் வேலியோர கிளுவை கன்றுடன் பட்டிப்பசு எல்லாமே மாண்டுபோயின கூடவே என் வசந்தமும்…

மௌனப்பூதங்கள்

வெறிச்சோடிய வீதி இதயத்தின் ஓரத்தில் ஒருவித படபடப்பு… சலனமற்ற வானம் பல்லை இழிக்கும் கூரிய முட்கள்;… பற்களை தீட்டிய மௌனப்பூதங்கள் எல்லாம் ஒன்று சேமி வரைவாக சேர்ந்து ஓடஓட விரட்டின… கலங்கிய மூளையினுள் மீன்கள் நீச்சலடித்தன…

பல்லியாய் மனிதர்கள்…

தடங்கள் பதிகின்றன நடந்த கால்கள் வலிப்பெடுத்தன… சொந்த வீடு சாய்ந்து படுத்த திண்ணை ஓலைக் குடிசைகள் எதுவுமே இப்போது இல்லை… மரத்தடியில்……………… மழை இன்றி வரண்டு கிடந்தன மரங்கள் இலைகளைக் காணோம் நிழலுக்கும் பஞ்சம்… சுவரில் ஒட்டிய பல்லியாய் மனிதர்கள்… மடித்துப் போடப்பட்ட காகிதத் தாள்கள் காற்றில் பறந்தன…

நான் மட்டும் நீயின்றி...

வெம்பி புழுங்கி கழியும் இரவை அமாவாசை அள்ளித் தின்று மூன்று நாட்கள் ஆகியிருந்தது மூன்றாம் பிறை பார்த்து முந்தானையில் முகம் புதைத்து கண்கள் குளமாகி சிவந்து போயின நேற்றும் இன்றும் நினைவுடனே.. என் கணவன் காணாமல் போய் இன்றுடன் மூன்று நாட்கள்… யாருமில்லா அந்தரத்தில் நான் மட்டும் நீயின்றி கண்ணீரும் தனிமையுமாக…

பேய் மழை…

அடை மழைப் பொழிவு விண்ணதிரும் இரைச்சல் நாய்களின் குரைப்பொலி வேலியோரம் மழையில் நனைகிறது வெள்ளாடு இருளைக் கிழித்து இரு கூறாக்கி வேலி போட்டது மின்னல் இடியின் பேரோசை சன்னமாய் காதினில்… விடிவின்றி நீண்டு கிடந்தது பகலும் இரவாக.. கிழக்கின் திசையை அறிய முடியாமல் தோற்றுப் போனது மனசு… கோடை வெயிலின் வெப்பம் தணிய கொட்டித் தீர்த்தது பேய் மழை… வெட்டவெளிகள் நீரில் மூழ்கின பற்றைக் காடுகள் பதுங்கிக் கொண்டன சதுப்பு நிலத்தில் சப்பாத்துக் கால்கள் கோலம் போட்டன…

முடியும் இடம்தேடி

கன்று போட்ட மாடு துவாலையடித்தது கோழி கனகூழை கிண்டியபடி... முகமிழந்தும் மனிதர்களாக… ஊசி முள்ளாய் குத்தியது இதயத்தில் பெருவலி கண்களில் அந்தி வானச் சிவப்பு உடல்களைத் தூக்கி நிறுத்தி தாங்கிப் பிடித்த கால்கள் தளர்நடையாக… சுட்டிய திசையில் நடைப் பயணம்… தாகம் பெருந்தாகம் தீர்க்க யாருமில்லை விடத்தல் முட்கள் கிழித்து உடும்பு வேட்டையாடிய காடுகள் தாண்டி… இன்னும் தொடரும் எங்கள் நடைப் பயணம் முடியும் இடம்தேடி மீண்டும் மீண்டும்…

எங்கள் அன்னைமடி

உச்சியிலே விரல் கோதி நெற்றியிலே திலகமிட்டு முறத்தால் புலிவிரட்டி மறத்தால் தலை நிமிர்ந்து தனித் திறத்தால் வளர்ந்து நின்று வந்தோரை வாழவைத்த அன்னைமடி எங்கள் வன்னி மடி… நிறை குளங்கள் பெருக்கெடுத்து அருவி பாய வாளை விரால் துள்ளிவந்து தாளம் போட… வாழை பலா கமுகுடனே வானம் பார்க்க நெற்கதிர்கள் குனிந்து மண்ணில் கோலம் போட… மோதி விழும் காற்று நல்ல வாசம் வீச வண்டினங்கள் வந்து நின்று கீதம் பாட… இன்பமாக என்றும் நாங்கள் வாழ்ந்த பூமி கண்கலங்கி நிற்பதென்ன முறையோ ஐயா…

ஈழத்தில் தமிழ் இலக்கியம்: தோற்றமும் தொடர்ச்சியும்

உள்ளடக்கம் வாழ்த்துரை அணிந்துரை முன்னுரை இயல் - 1 ஈழத்தில் இலக்கிய வரலாறும் அதன் பயில் துறை தொடர்பான அறிமுகமும் 1.1. யார் அந்த ஈழத்துப் பூதந்தேவனார் 1.2. ஈழத்தின் ஆரம்ப கால இலக்கிய முயற்சிகள் பற்றிய சில தேடல்கள் இயல் -2 ஆரியச் சக்கரவர்த்திகள் காலம் 2.1. இலக்கியங்களும் அவற்றின் போக்கும் 2.2. இலக்கியங்களின் சிறப்பியல்புகள் இயல் -3 போத்துக்கேயர்-ஒல்லாந்தர் காலம் 3.1. இலக்கியங்கள் 3.2. பிரபந்தங்கள் அதிகம் தோன்ற சாதகமான காரணிகள் 3.3. இலக்கியப் பண்புகள் 3.4. தமிழறிஞர் சிலர் பற்றி… இயல் -4 19 ஆம் நூற்றாண்டில் ஈழத்து இலக்கியம் 4.1. இலக்கிய வகைகள் 4.2. அச்சியந்திர விருத்தியும் பன்முக வளர்ச்சியும் 4.3. ஆறுமுக நாவலரின் இலக்கியப் பணிகள் 4.4. ஆங்கிலேயர் கால இலக்கியங்களின் சிறப்பியல்புகள் 4.5. தமிழறிஞர் சிலர் பற்றி… இயல் -5 நவீன இலக்கியங்களின் செல்நெறி 5.1. நாடகங்கள் தோன்றி வளர்ந்தமை 5.1.1. சுதந்திரத்துக்கு முன்னைய நாடக வளர்ச்சிப் போக்கு 5.1.2. 1950 களின் பின்னைய நாடக வளர்ச்சிப் போக்கு 5.1.3. அண்மைக்கால நாடக இலக்கிய முயற்சிகள் 5.2. தமிழ்க் கவிதை வளர்ச்சி 5.2.1. மரபு வழிப்பட்

இயல்-1 - ஈழத்தில் இலக்கிய வரலாறும் அதன் பயில்துறை தொடர்பான அறிமுகமும்

தேவதட்சனால் குபேரனுக்காக இலங்காபுரி அமைக்கப் பட்டதாக இராமாயண உத்தர காண்டம் கூறுகின்றது. காலத்துக்குக் காலம் இலங்கைக்கு பல்வேறு நாட்டினரும் பல பெயர்களைக் கூறி அழைத்துள்ளமையினை வரலாற்றுக் குறிப்புக்களில் இருந்து அறிய முடிகின்றது. ‘ஈழம்’ என்ற பெயரால் பண்டைக் காலத்தில் இலங்கை அழைக்கப் பெற்றமைக்கு கல்வெட்டு ஆதாரங்கள், புதைபொருள் ஆய்வுகள் இன்றும் சான்றாக உள்ள அதேவேளையில் சங்ககால இலக்கியமான பட்டினப்பாலையில் வரும் “ஈழத்துணவும் காழகத்து ஆக்கமும்”(1) என்ற வரி முக்கியம் பெற்றுக் காணப்படுகின்றது. ஈழம் என்றால் ‘பொன்’(2) என்றும் பொருள்படும். இலக்கியமானது சமூக உருவாக்கத்தின் ஒரு கருவியாகும். காலங்காலமாக இலக்கியங்களினை எழுத முன்னின்றவர்கள் பலர் அரசியலின் உள்ளீர்ப்பினால் உந்தப்பட்டவர்களாக, வரலாற்றுடன் தொடர்புபடுத்தி இலக்கியங்களை எழுதியுள்ளனர். ஓர் இலக்கியம் காலத்தினை அடிப்படையாகத்தான் தோன்றுகின்றது என்ற உண்மையினையும் நாம் மறந்துவிடக்கூடாது. எந்தவொரு இலக்கியத்தினையும் ஊன்றிக் கற்கும் வாசகன் ஒருவன் அவிவிலக்கியத்தினூடாக அது தோன்றிய காலகட்டத்தை இனங்கண்டு கொள்ள முடிகின்றதெனில், எந்தவொரு இலக்கியமும் வரலாறாகி

1.1. யார் அந்த ஈழத்துப் பூதந்தேவனார்?

இலங்கைத் தமிழ் இலக்கிய வரலாற்றினை ஈழத்துப் பூதந்தேவனாருடன் தொடங்குவது மரபாகக் காணப்படுகின்றது. ஈழத்துப் பூதந்தேவனார் என்பவர் சங்க கால இலக்கியத்தில் வரும் ஒரு புலவர் ஆவார். இப்புலவர் சங்க இலக்கியங்களிலே நான்கு வகைப் பெயர்களில் அழைக்கப்படுகின்றார். குறுந்தொகை 343, அகம் 88 - ஈழத்துப் பூதந்தேவன் நற்றிணை 366 - ஈழத்துப் பூதந்தேவனார் குறுந்தொகை 189, 360 - மதுரை ஈழத்துப் பூதந்தேவன் அகம் 231, 307 - மதுரை ஈழத்துப் பூதந்தேவனார் இவ்வாறு குறுந்தொகை, அகநானூறு, நற்றிணை நானூறு ஆகிய நூல்களில் வரும் ஏழு செய்யுள்களில் இருந்து ஈழத்துப் பூதந்தேவனார் பற்றிய குறிப்புக்களினை அறியமுடிகின்ற போதிலும் இவர் ஈழத்தவர் என்பதற்கான எந்தவொரு ஆதாரமும் இந்நூல்களில் இடம்பெறவில்லை. ‘ஈழத்து’ என்ற அடைமொழியை மட்டும் வைத்துக்கொண்டு இவர் ஈழநாட்டினராக இருக்கலாம் எனக் கருதுவோரும் உள்ளனர். உண்மையில் இவர் ஈழ நாட்டினர் தானா என்பதற்கு வலுவான ஆதாரங்கள் எவையும் உள்ளனவா என்று தேட வேண்டியது அவசியமாகின்றது. ‘ஈழத்து’ என்ற அடைமொழியுடன் இரண்டு இடங்களிலும், ‘மதுரை ஈழத்து’ என்ற அடைமொழியுடன் இரண்டு இடங்களிலுமாக அழைக்கப்பட்ட இவர்

1.2. ஈழத்தின் ஆரம்பகால இலக்கிய முயற்சிகள் பற்றிய சில தேடல்கள்

ஈழநாட்டில் மகாசேனன்(கி.பி.275-310) ஆட்சி செய்த காலப்பகுதியில் தமிழ் நாட்டில் சங்ககாலம் முடிவுறும் கட்டத்தினை நெருங்கி இருந்தமையினை இலக்கியங்கள் மூலம் அறியமுடிகின்றது. மகாவம்சம் தமிழ் இலக்கியங்கள் தொடர்பான செய்தியினை விரிவான முறையில் முன்வைக்கத் தவறிவிட்டது. இந்நிலையில் ஈழத்துப் பூதந்தேவனாருடன் (சங்க இலக்கியங்களுடன் ) ஈழத்து இலக்கிய முயற்சிகளும் தொடங்குவதாக எடுத்துக்கொண்டால், அதற்கு அடுத்த காலகட்டமாக கி.பி.1216இல் தொடங்குகின்ற ஆரியச் சக்கரவர்த்திகள் (யாழ்ப்பாண இராச்சிய) காலத்தையே கொள்ள முடிகின்றதெனில், கி.பி.1310இல் தம்பதெனியாவில் அரங்கேற்றப்பட்ட சரசோதிமாலை வரை ஈழத்தில் தமிழ் இலக்கிய முயற்சிகள் எவையும் இடம்பெறவில்லையா என்ற ஐயப்பாடு எழுகின்றது. இந்த நீண்ட இடைவெளி இலங்கைத் தமிழ் இலக்கிய வரலாற்றினைத் தொடர்ச்சியின்றிக் காட்டுவதனால் ஈழத்தவர் தமிழுக்கு ஆற்றிய தொண்டு யாதென அறிய முடியாமல் உள்ளது. கி.பி.10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் பதுளைக் கல்வெட்டில் “தெமழன்டரடனா தென்தரு ஆவா நொதென இசா ………………”(6) என்ற செய்தியொன்று காணப்படுகின்றது. தமிழர்களுக்கு நாட்டின் தலைவர்களின் ப

இயல்-2 -ஆரியச் சக்கரவர்த்திகள் காலம் (கி.பி.1216-1621)

கி.பி. 13ஆம் நூற்றாண்டின் முற்பகுதி தொடக்கம் தமிழ் மன்னர்களான ஆரியச்சக்கரவர்த்திகள் யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்டு பெரியதொரு இராட்கியத்தை நிறுவி கட்டிக்காத்தனர். வடக்கே நிலைமை இவ்வாறிருக்க சமகாலத்தில் நாட்டின் திசையெங்கும் தமிழர் செறிந்து வாழ்ந்தனர். மன்னர்களான செயவீரசிங்கனும் எதிர்மன்னசிங்கனும் புலவர்களாக விளங்கியதுடன் தமிழையும் தமிழ்ப் புலவர்களையும் கட்டிக் காத்தனர். பதினெட்டு தமிழ் மன்னர்கள் மாறிமாறி ஆட்சி செய்த அக்காலமானது ஈழத்து இலக்கியத்தின் பொற்காலமாக விளங்கியதனையும் அவதானிக்க முடிகின்றது. தாம் புலவர்களாக இருந்து தமிழை வளர்த்த போதிலும் தமிழகத்தில் இருந்து வந்த புலவர்களை ஆதரித்து, இருப்பிடம் வழங்கியும் கௌரவித்தனர். “சரஸ்வதி பண்டாரம்”(5) என்ற நூல் நிலையத்தினை யாழ்ப்பாணத்தில் அமைத்து தொண்டாற்றினர். இது பின்னர் போத்துக்கேயரினால் தீக்கிரையாக்கப் பட்டது.

2.1. இலக்கியங்களும் அவற்றின் போக்கும்

யாழ்ப்பாண மன்னர் கால இலக்கியங்களினை பொருள், வடிவ, பண்பு என்ற நெறிகளுள் எதனடிப்படையில் ஆராய்வதென்பதில் பலரும் பல்வேறு சிக்கல்களினை எதிர்கொண்டுள்ளனர்.எனினும் ஆய்வு வசதி கருதி ‘பண்பு’ அடிப்படையில் பின்வருமாறு பகுத்து ஆராயலாம். 1. சமய சார்புடைய நூல்கள் 2. சோதிட நூல்கள் 3. வைத்திய நூல்கள் 4. தழுவல் நூல்கள் ஃ காவியம் 5. வரலாறு சார்புடைய நூல்கள் 2.1.1. சமய சார்புடைய நூல்கள் யாழ்ப்பாணக் கலாசாரம் ‘கந்தபுராணக் கலாசாரம்’ என்னுமளவிற்கு இந்துசமயச் செல்வாக்கானது நிலைபெற்றிருந்ததனை அறிய முடிகின்றது. அக்காலத்தில் அரசோச்சிய மன்னர்களும் மக்களும் மதப்பற்று மிக்கோராகவும் கோயிற் பண்பாட்டுடன் ஈடுபாடுடையவர்களாகவும் விளங்கினர். ஆலயத் தொண்டர்கள் ஆலயங்களிலேயே குடியமர்த்தப்பட்டனர். ஆட்சிப் பரப்புக்குள் ஆலயங்களும், வழிபாட்டு மரபுகளும் நன்கு வேரூன்றி இருந்தமையினால் சமயச் சார்புடைய இலக்கியங்களும் தோற்றம் பெற்றன. அக்காலத்தில் எழுந்த சமயச் சார்புடைய இலக்கியங்களினை இரண்டு பிரிவுகட்கு உட்படுத்தி ஆய்வு செய்ய முடிகின்றது. 1. கற்றோரை மையமாகக் கொண்டெழுந்தவை. 2. அடிநிலை மக்களை மையமாகக் கொண்டவை. 3. என்பனவாம்: எனினும் இன்று

2.2. ஆரியச்சக்கரவர்த்திகள் கால இலக்கியங்களின் சிறப்பியல்புகள் (பண்புகள்)

யாழ்ப்பாண இராச்சிய காலத்தில் சமயம், வைத்தியம், சோதிடம், வரலாறு, தழுவல் போன்ற பண்புகளுடன் கூடிய இலக்கியங்கள் எழுந்தன. காவியம், புராணம், பள்ளு போன்ற இலக்கிய வடிவங்களும் பெரும் செல்வாக்குடன் காணப்பட்டன. கி.பி.17ஆம் நூற்றாண்டு வரை இலங்கையில் எழுந்த இலக்கியங்கள் எல்லாம் ஆரியச்சக்கரவர்த்திகள் காலத்துக்கு உரியனவாகவே கொள்ளப்படுகின்றன. கி.பி.1310இல் தம்பதெனியாவில் அரங்கேற்றப்பட்ட ‘சரசோதிமாலை’ என்னும் நூலே ஈழத்துக்குரியதென இனங்காணப்பட்ட முதல் நூல் ஆகும். சோதிடக்கலை பற்றிய பல்வேறு நம்பிக்கைகளினை இந்நூல் தருகின்றது. பின்னர் எழுந்த செகராசசேகர மாலையும் சாஸ்திர, நாள், கோள், நற்பயன் உரைக்கும் பண்புடன் திகழ்கின்றது. வைத்தியம் தொடர்பான நூல்களும் இக்காலத்துக்குரியனவாக இனங்காணப்பட்டன. செகராசசேகரம், பரராசசேகரம் என்பன சிறந்த வைத்திய நூல்களாக இருப்பினும் ‘விசகடி’ வைத்தியம் பற்றிய குறிப்பெதனையும் அவற்றிலிருந்து பெறமுடியாமை ஓர் குறைபாடே எனலாம். ‘தாயைக் கொன்றான் சாறெடுத்துத் தடவிக்கொண்டால் தீர்ந்திடுமே’ என நெருப்புச் சுட்ட புண்ணுக்கான மருந்து கூறப்பட்டுள்ளது. இவ்வாறு சிலருக்கு மட்டுமே விளங்கக்கூடிய (தாயைக் கொன

இயல் -3 - போத்துக்கேயர்-ஒல்லாந்தர் காலம் (கி.பி.1621-1796)

ஆரியச்சக்கரவர்த்திகளின் பின்னர் ஈழத்தின் தமிழ்ப் பிரதேசங்கள் ஒன்றன் பின் ஒன்றாக அந்நிய அரசுகளினால் ஆளப்பட்டன. போத்துக்கேயரும் ஒல்லாந்தரும் அடிப்படையில் தமிழையும் அதனுடன் இணைந்த சைவத்தையும் எதிர்ப்பவர்கள். அவர்களுடைய ஆட்சிக் காலத்தில் கருத்துச் சுதந்திரம், அச்சுச் சுதந்திரம் என்பன தமிழருக்கோ அல்லது சைவருக்கோ சுயாதீனமாக இருந்ததாகத் தெரியவில்லை. ஆனால் ஆங்கிலேயராட்சியில் ஓரளவு கருத்துச் சுதந்திரமும் பூரண அச்சுச் சுதந்திரமும் வழங்கப்பட்டிருந்தது. அதைவிட ஆங்கிலேயராட்சியில் நவீனத்துவம் சார்பான கருத்துக்களுக்கும் முன்னுரிமை வழங்கப்பட்டிருந்தது. அரசியல் ரீதியில் போத்துக்கேயரும் ஒல்லாந்தரும் வேறுவேறான ஆட்சி செலுத்தியிருப்பினும் இலக்கிய நிலைநின்று, “ஒருங்குசேர வைத்து நோக்கும் போது ஈழத்திலக்கிய வளர்ச்சியின் முக்கிய பண்புகள் சில துலக்கமாகத் தெரிவதைக் காணலாம்.”(1) எனவே போத்துக்கேயர்-ஒல்லாந்தர் காலத்தினை இணைந்த பகுதியாகவும் அதைத் தொடர்ந்து வந்த ஆங்கிலேயர் காலத்தை தனியான பகுதியாகவும் விரிவான முறையில் நோக்குவதே பொருத்தமானதாக அமையும். போத்துக்கேயர் அரசு கட்டில் ஏறிய பின்னர் ஈழத்தில் கட்டிறுக்கமான அரசியல

3.1. போத்துக்கேயர்-ஒல்லாந்தர் கால இலக்கியங்கள்

போத்துக்கேயர்-ஒல்லாந்தர் கால இலக்கியங்களினை நுணுகி ஆராய்கின்ற போது அவற்றுக்கிடையே சில ஒற்றுமைகள் இருப்பதை அவதானிக்க முடிகின்றது. போத்துக்கேயர் காலத்தில் எழுந்த நூல்கள் இரண்டு என்றும் மூன்று என்றும் கருத்துக்கள் நிலவுகின்ற இக்கால கட்டத்தில் இனங்காணப்பட்ட இலக்கியங்களான ஞானப்பள்ளு, அர்ச்யாகப்பர் அம்மானை, ஞானானந்த புராணம் ஆகிய மூன்றும் கிறிஸ்தவ சார்புடன் காணப்படுகின்றன. அ. ஞானப்பள்ளு ‘வேதப்பள்ளு’ எனப் பலராலும் அறியப்பட்ட இந்நூல் ஜேசுநாதரைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டது. யாரால் பாடப்பட்டது எனத் தெரியாது விடினும் அக்காலத்தில் ஜேசு சபையில் அங்கம் வகித்த ‘செபஸ்தியான் பொஸ்கோ சுவாமி’களின் அனுசரனையுடன் இது பாடப்பட்டிருக்கின்றது என்பதற்கும் கி.பி.1650க்கு முன்னரேயே பாடப்பட்டு விட்டது என்பதற்கும் நூலிலேயே அகச் சான்றுகள் காணப்படுகின்றன. ஆ. அர்ச்யாகப்பர் அம்மானை ஆரிய வம்சத்தவரான தெல்லிப்பளை பூலோகசிங்க முதலியாரால் 1647இல் இந்நூல் பாடப்பட்டது. ‘சந்தியோகு அம்மையார் அம்மானை’ எனவும் இது வழங்கப்பட்டு வருகின்றது. விருத்தப்பாவினால் பாடப்பட்ட இந்த நூலானது அடிநிலை மக்களைக் குறிவைத்துப் பாடப்பட்டது போலத் தெரிகி

3.2. போத்துக்கேயர் – ஒல்லாந்தர் காலத்தில் அதிகளவிலான பிரபந்தங்கள் தோன்றுவதற்குச் சாதகமாக அமைந்த காரணிகள்

போத்துக்கேயர்-ஒல்லாந்தர் காலத்தில் என்றுமில்லாதவாறு, ஈழத்தில் அதிகப்படியான பிரபந்த இலக்கியங்கள் தோன்றின. தமிழகத்தில் விஜயநகர நாயக்கர் காலம் நிலவிய அதேகாலத்தில் ஈழத்தை போத்துக்கேயரும் ஒல்லாந்தரும் ஆட்சி புரிந்து வந்தனர். சமகாலத்தில் ஈழத்திலும் தமிழகத்திலும் பிரபந்தங்கள் அதிகப்படியாகத் தோன்றின. போத்துக்கேயர்-ஒல்லாந்தர் காலத்தில் பிரபந்தங்கள் அதிகப்படியாகத் தோன்ற பல்வேறு காரணிகள் தூண்டுதலாக அமைந்தன. (அ) போத்துக்கேயர் – ஒல்லாந்தர் கால அரசியல் நிலையானது முன்னைய ஆரியச்சக்கரவர்த்திகள் காலத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்டிருந்தமையினால் மக்களின் சமூக வாழ்வியலும் தவிர்க்க முடியாதபடி மாறியது அல்லது மாற்றியமைக்கப்பட்டது. போத்துக்கேயர் 1621இல் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்ற முன்னரேயே யாழ்ப்பாணத்தில் கிறிஸ்தவ மதம் ஓரளவு பரவத் தொடங்கியிருந்தது. 1542ஆம் ஆண்டு 600 பேர் மன்னாரில் கிறிஸ்த்தவத்துக்கு மதம் மாற்றப்பட்டதை அறிந்த சங்கிலி மன்னன் படையுடன் மன்னார் சென்று மதகுருவையும் மதம் மாறியோரையும் கொலை செய்தான்.(4) இதன் விளைவாகச் சைவ-கிறிஸ்தவ முரண்பாடு உச்ச நிலைக்குச் சென்று பின் அது யாழ்ப்பாணத்தையே போத்துக்கேய

3.3. போத்துக்கேயர் - ஒல்லாந்தர் கால இலக்கியங்களின் பண்புகள்

ஈழநாட்டில் பாரம்பரியமாக மக்களிடையே நிலவி வந்த உயரிய ஒழுக்கங்கள் பல போத்துக்கேயர்-ஓல்லாந்தரின் வருகையுன் இழக்கப்பட்டன. உயர் இலக்கண, இலக்கிய, சமய கல்விகள் மறைமுகமாகக் கற்க-கற்பிக்க வேண்டிய சூழல் உருவானது. கிறிஸ்த்தவம் போதிக்கப்பட்ட இடங்களாகப் பாடசாலைகள் மாற்றியமைக்கப் பட்டன. பின்னையநாளில் ஒல்லாந்தர் சற்று நெகிழ்வுப் போக்குடன் இருந்தமையினால் சைவசமயம் சார்பான இலக்கியங்களும் தோன்ற வழியேற்பட்டது. போத்துக்கேயர் காலத்துக்குரியதான மூன்று நூல்களுமே கிறிஸ்தவ மதச்சார்புடன் காணப்பட்ட நிலையில் ‘ஞானப்பள்ளு’ ஈழத்து இலக்கிய மரபில் இருந்து விடுபட்டு உரோமபுரியையும் ஜெருசலத்தையும் விதந்து பாடும் தன்மையுடன் விளங்குகின்றமை சுட்டத்தக்கது. இதன்மூலம் கிறிஸ்து புகழை தமிழ்க் கிறிஸ்தவர் மத்தியில் நிலைநாட்ட ஞானப்பள்ளு பயன்பட்டிருக்கலாம் எனக் கருத இடமுண்டு. இளங்கோவடிகள் தனது சிலப்பதிகாரத்தில் அம்மானை வடிவினைத் தொட்டுக்காட்ட மணிவாசகர் அதனையே பாட, அதில் சிறு மாறுபாட்டுடன் தெல்லிப்பளை பூலோகசிங்க முதலியார் போத்துக்கேயர் காலத்தில் ஆர்ச்யாகப்பர் அம்மானையைப் பாடினார். பின்னர் ஒல்லாந்தர் காலத்திலும் திருச்செல்வர் அம்மானை ப

3.4. இக்காலத் தமிழறிஞர் சிலர் பற்றி…

அ. நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் காலம்: 1761-1780 வரை பின்னணி: தொன்பிலிப்பு வில்வராச முதலியாரின் மகன் அன்னை வழியில் செகராச சேகரன் மரபில் வந்தவர். திறமை: சிறு வயதிலேயே கல்வியாற்றல் மிக்கவர். ‘பொன்பூச் சொரியும்…” என்ற பாடல் மூலம் சிறுவனாகக் -கவியுலகில் கால் பதித்தவர். தந்தையால் எழுத முடியாமல் நிறுத்தப்பட்ட நூலை எழுதி -முடித்தவர். பாராட்டு: பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை அவர்கள் இவரை ‘ஈழத்து இலக்கிய வழிக்கு ஊற்று’ எனப் புகழ்ந்துள்ளார். நூல்கள்: பறாளை வினாயகர் பள்ளு கரவை வேலன் கோவை கல்வளை அந்தாதி மறைசை அந்தாதி ஆ. அரசகேசரிப் புலவர் காலம்: யாழ்ப்பாண மன்னர் கால இறுதி பின்னணி: 8ஆம் பரராசசேகரனின் சகோதரன் நாயன்மார்க்கட்டில் வசித்தவர். நீர்வேலியை ஆட்சி புரிந்தவர் திறமை: தமிழ்-வடமொழிப் பண்டித்தியம் நூல்: இரகுவம்சம்(மொழிபெயர்ப்பு) தட்சிணகைலாய புராணத்தையும் இவரே எழுதினார் என்பர். எனினும் இது ஆய்வுக்குரியது. இ. மாதகல் மயில்வாகனப் புலவர் காலம்: 1779-1816 வரை பின்னணி: தந்தை-சுப்பிரமணியன் கூலங்கைத் தம்பிரானிடம் கற்றவர். சிறப்பு: காசி, சிதம்பரம் எனத் தலயாத்திரை செய்தவர். நூல்கள்: புலியூர் அந்

இயல்-4 - 19ஆம் நூற்றாண்டில் ஈழத்து இலக்கியம்

ஈழத்து இலக்கிய வரலாற்றைப் பொறுத்தவரையில் மேனாட்டாராட்சியில் ஆங்கிலேயராட்சியே பெரும் புரட்சி செய்ததென்பதை எவரும் மறுப்பதற்கில்லை. பிரித்தானியர் ஆட்சியும் கத்தோலிக்க மதமும் ஈழத்தில் சமூகம், அரசியல், பொருளாதாரம் என்ற கட்டமைப்புக்களில் பாரிய தாக்கத்தினை உண்டுபண்ண, அதன்விளைவாக தமிழ் இலக்கியமும் நவீனமயவாக்கத்துக்குள் படிப்படியாக உள்வாங்கப்பட்டது. பத்தொன்பதாம் நூற்றாண்டென்ற இவ் இலக்கியப் பயில் நெறியானது விரிந்து பரந்து இருபதாம் நூற்றாண்டின் முதல் இரண்டு, மூன்று தசாப்தங்களினையும் தன்னகத்தே கொண்டு, பல புதுமைகளைச் செய்து தமிழிலக்கியத்தில் மாற்றங்களினை உண்டுபண்ணியதுடன் பிற்காலத்தில் ‘நவீனத்துவம்’ என்ற செல்நெறியில் தன்னையும் இணைத்துப் புதுமை படைக்க வழிகோலியது. “தமிழ் இலக்கிய வரலாற்றின் வளர்ச்சியில், 1835-1929க் காலகட்டமே சிக்கல் மையப்பட்ட காலமென்று கொள்ளப்படத் தக்கதாகும். தமிழ் இலக்கிய வரலாற்றை விளங்கிக் கொள்வதற்கும் அதனைத் தமிழர்களுக்கு எடுத்துக் கூறுவதற்கும், மேனாட்டு அணுகுமுறைகளையும் கைக்கொண்டு தொழிற்பட்ட ‘உருவாக்க காலம்’ என்ற வகையில், இக்கால கட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட வரலாற்றெழுது நெறிகள், தம

4.1.இலக்கிய வகைகள்

19ஆம் நூற்றாண்டின் மாறுபட்ட சூழலும் அச்சியந்திர விருத்தியின் பன்முகப்பாடும் ஆங்கிலக்கல்வி விருத்தியும் திண்ணைக்கல்வி முறைகளினைப் பாடசாலைக் கல்வியாக மாற்றியமைத்தன. நாடு முழுவதையும் ஒரே அரசு ஆட்சி புரிந்தமையானது புதுமையான கருத்துக்களுக்கு முதன்மையளிப்பதாக இருந்தது. இதனால் இலக்கியங்களிலும் புதுமைக்கான தேடல் இடம்பெறத் தொடங்கியது. அவ்வாறு படைக்கப்பட்ட இலக்கியங்கள் மூன்று பெரும் பிரிவுகளைக் கொண்டதாக விளங்கக் காணலாம். 1. செய்யுள் இலக்கியம் அ. சமயச் சார்புடையன இளவசப் புராணம் றகுலமலைக் குறவஞ்சி முகைதீன் புராணம் ஆ. மக்கள் சார்புடையன கனகி புராணம் கோட்டுப் புராணம் தால புராணம் போன்றன. இ. நவீனத்தினூடே பழமை பேணுவன தத்தைவிடு தூது சுவதேச கும்மி தனிப் பாடல்கள் சில போன்றன. 2. உரைநடை இலக்கியம் அ. பழைய உரைநடை காரர் நடையில் அமைந்த நூல்கள். ஆ. நாவல்கள் இ. சமயச் சார்புடைய நூல்கள் ஈ . பாடநூல்கள் உ. நாடகங்கள் ஊ. பத்திரிகைகள் போன்றன. 3. பன்முக வளர்ச்சி அ. பத்திரிகைகள் ஆ. பதிப்பு முயற்சிகள் இ. அகராதி முயற்சிகள் ஈ . மொழி பெயர்ப்பு உ. இலக்கண

4.2. அச்சியந்திர விருத்தியும் பன்முக வளர்ச்சியும்

கி.பி. 1835ஆம் ஆண்டில் அப்போது மகா தேசாதிபதியாக இருந்த சேர் “சார்ள்ஸ் மெக்காஃவ்” என்பவரினால் ‘அச்சுச்சுதந்திரம்’(2) இந்தியா எங்கணும் வழங்கப்பட்ட பின்னர் ஈழத்திலும் பல அச்சுச்சாலைகள் நிறுவப்பட்டன. இவ்வாறு சுதேசிகளினால் அச்சியந்திர சாலைகள் நிறுவப்பட்ட பின்னர் அச்சுக்கலையின் செயற்பாடும் விரிவடையத் தொடங்கியது. 1849இல் ஆறுமுக நாவலர் அவர்கள் நல்லூரில் அச்சியந்திர சாலையை நிறுவி(3) ஈழத்தவரின் இலக்கியச் சாதனைகள் பலவற்றுக்கு களம் அமைத்துக் கொடுத்தார். அச்சியந்திர விருத்தியானது அதிசயிக்கத்தக்க வகையில் ஈழத்தில் பெரும் இலக்கியப் புரட்சியை ஏற்படுத்தியது. அ. பத்திரிகைத் துறைவளர்ச்சி ஆ. உரைநடை இலக்கியங்களின் பெருக்கம் இ. பதிப்பு முயற்சி ஈ . புத்தாக்க முயற்சி உ. மொழிபெயர்ப்பும் ஆய்வுமுயற்சியும் போன்ற பல துறைகளும் பாரியளவில் வளர்சிசியடைந்தன. அ. பத்திரிகைத்துறையின் வளர்ச்சி 19ஆம் நூற்டறாண்டில் ஆங்கிலேயரின் வருகையுடன் சுதேசிகளுக்கான அச்சியந்திரப் பயன்பாட்டு வசதிகள் உண்டாகின. இவ் அச்சுச் சுதந்திரமானது பத்திரகை, சஞ்சிகை போன்றவற்றின் வெளியீட்டு முயற்சியில் பெரிதும் செல்வாக்குச் செலுத்தியது. அக்கால ஊடகத்த

4.3. ஆறுமுக நாவலர் புரிந்த தமிழ் இலக்கியப் பணிகள்

யாழ்ப்பாண நல்லூரில் கந்தர்-சிவகாமி தம்பதியரின் மகனாக ‘ஆறுமுகம்’ என்ற பிள்ளைத் திருநாமத்துடன் பிறந்து பின்னை நாளில் உலகம் போற்றும் நாவலராகத் திகழ்ந்த பேராளன் உதித்த பொன் நாள் 1822-12-18 ஆகும். இவர் சைவமும் தமிழும் இரண்டு கண்கள் எனக் கொண்டு வாழ்ந்தவர். மிகச் சிறந்த உரை ஆசான், உரைநடை வல்லாளர், பதிப்பாசிரியர், நல்லாசான், நாவன்மைப் பேச்சாளர், சைவ வாழ்வு வாழ்ந்த தண்ணளியான். நாவலர் அவர்கள் எழுதியும் பிரசுரித்தும் வெளியிட்ட நூல்கள் 73, தாமே எழுதிய நூல்கள் உட்பட உரைநடை நூல்கள் எனப்பட்டன 22, இவற்றுள் உரைநடை ஆற்றலுக்கு உன்னத எடுத்துக் காட்டாய் கொள்ளத் தக்கன 10, அவை 1ஆம், 2ஆம், ; பால பாடங்கள், பெரிய புராண வசனம், சைவ சூசன பரிகாரம், யாழ்ப்பாணச் சமயநிலை, திருவிளையாடற் புராண வசனம், நல்லூர் கந்தசுவாமி கோயில், பெரிய புராண சூசனம், போலியருட்பா மறுப்பு, நாவலர் பிரபந்தத் திரட்டு(10) ஆகியனவாகும். நாவலர் தமிழ் மாணவர்கள் படிக்க வேண்டும் என்பதற்காகப் பாடசாலைகள் அமைத்தும் அருந் தொண்டாற்றியுள்ளார். திண்ணைப் பள்ளிக்கூடங்கள் அமைத்து இலவசக் கல்வி சொல்லிக் கொடுத்துள்ளார். அச்சியந்திர சாலைகளை அமைத்து நூல்களைப் ப

4.5. தமிழறிஞர் சிலர் பற்றி…

1. புலவர்மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளை காலம்: 1899-1978 பின்னணி: மட்டக்களப்பைச் சேர்ந்தவர் திறமை: மரபுவழித் தமிழ் அறிஞர் பல பட்டங்கள் பெற்றவர் சிறந்த கவிஞர் சிறந்த பேச்சாளரும், ஆசிரிய கலாசாலை அதிபரும், வசனகர்த்தாவும் மொழிபெயர்ப்பாளரும் ஆவார். உரைநடை நூல்கள் பலவற்றை எழுதினார். சிறப்பு: ‘வெண்பாவிற் புலவர்மணி’ எனப் பாராட்டுப் பெற்றார். நூல்கள்: பகவத்கீதை வெண்பா புலவர்மணி கவிதைகள் மண்டூர்ப் பதிகம் விபுலாநந்தர் மீட்சிப்பத்து உள்ளதும் நல்லதும். 2. யாழ்ப்பாண பதுறுத்தீன் புலவர் காலம்: 19ஆம் நூற்றாண்டின் முற்பகுதி பின்னணி: இஸ்லாமிய அறிஞர்-யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். திறமை: சிறந்த தமிழ் மொழியறிஞர் புலமையாளர் நூல் முகைதீன் புராணம்-இது 2பாகம், 74படலம், 2983திருவிருத்தங்களுடன் இயற்கை வர்ணனை, அணிநலன் மிகுந்து விளங்குகின்றது. 3. பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை காலம்: இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதி பின்னணி: மட்டுவிலில் பிறந்தவர் திறமை: மட்டுவில் சந்திரமௌலீச வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வி கற்றுப் பின் மரபுவழித் தமிழறிஞராக இருந்தார். சிறப்பு: கம்பனைப் புகழ்ந்து பல கட்டுரைகள் எழுதினார். அகத்திணைக் கோட

இயல்-5 - ஈழத்தில் நவீன தமிழ் இலக்கியங்களின் செல்நெறி

ஆங்கிலேயர் காலப் பிற்பகுதியுடன் இணைந்து காணப்பட்ட இருபதாம் நூற்றாண்டின் தமிழ் இலக்கியச் செல்நெறி மிகவும் சிக்கலுக்குரியதும் ஆய்வுக்குரியதுமாகும். எனவே ஆய்வு வசதி கருதியும் மாணவர்களின் கற்றற் செயற்பாட்டின் இலகு கருதியும் இப்பெரும் பகுதியினைப் பின்வருமாறு சிறு அலகுகளாகப் பகுத்து ஆய்வுக்குட்படுத்துவது பயனுடைத்தாகும். 5.1. ஈழத்தில் தமிழில் நாடகம் தோன்றி வளர்ந்தமை 5.2. ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி 5.3. ஈழத்தில் தமிழ்ச் சிறுகதை வளர்ச்சி 5.4. ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி 5.5. ஈழத்தில் தமிழில் திறனாய்வு வளர்ச்சி

5.1. ஈழத்தில் தமிழில் நாடகம் தோன்றி வளர்ந்தமை

ஈழத்து இலக்கிய வளர்ச்சியினை உற்று நோக்குவோர் நாட்டுக் கூத்தினையும் நாடகத்தையும் பிரித்து நோக்கியதாக அறியமுடியவில்லை. அவ்வாறு பிரித்து ஆய்வதும் பொருத்தமானதாக அமையாது. சிலர் நாட்டுக்கூத்தின் ஒருவகையே நாடகம் (1) என்பர். வேறுசிலர் நாட்டுக் கூத்தின் முதிர்ச்சியான தன்மையே நாடகம் (2) என்பர். நாட்டுக்கூத்தானது மக்களின் உணர்ச்சிகளை இசை, ஆடல், பாடல், உரையாடல் மூலம் வெளிக் கொண்டுவரப் பயன்பட்ட ஒரு உத்தியாகும். இது மாவட்டம், பிரதேசம் என்ற வகையில் பாரிய வேறுபாடுகளுடன் விளங்கியது. பிரதேசத்துக்குப் பிரதேசம் கூத்து மரபுகளும் வேறுபட்டிருந்தன. மட்டக்களப்பில் :-மட்டக்களப்பில் வழங்கிவரும் கூத்து வகையினை வடமோடி, தென்மோடி, விலாசம் என மூன்றாக வகுப்பர். வடமோடியும் தென்மோடியுமே சிறப்பிடம் பெற்று விளங்கக் காணலாம். புராண-இதிகாசக் கதைகளின் தாக்கத்தினை வடமோடியிலும் இசைமரபைத் தென்மோடியிலும் காணக்கூடியதாக உள்ளது.(3) மன்னாரில் :-மாதோட்டப்பாங்கு அல்லது தென்பாங்கு யாழ்ப்பாணப்பாங்கு அல்லது வடபாங்கு என இரண்டு வகையான கூத்து மரபுகள் மன்னாரில் வழக்கத்தில் உள்ளன.(4) வடபாங்கில் கடவுள் வாழ்த்து விருத்தப்பாவில் அமைந்திருக்க

5.2. ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி

ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி பற்றிச் சிந்திக்கும் போது அடிப்படையில், அவற்றுக்கிடையில் நான்கு போக்குகளை இனங்காண முடிகின்றது. அவையாவன, 1.மரபு வழிப்பட்ட நிலை 2. சுதந்திரத்துக்கு முந்திய சமூக மறுமலர்ச்சிப் போக்கு 3. சுதந்திரத்துக்குப் பிந்திய நவீன கவிதை வளர்ச்சி 4. அண்மைக்காலப் போக்கு இனி, இவற்றின் செல்நெறிகள் பற்றிச் சுருக்கமாகவும் விரிவாகவும் ஆராய்வது பொருத்தமானதாக அமையும். 5.2.1. மரபு வழிப்பட்ட நிலை மரபுக் கவிதை எனக் கருதப்படுவது சமயச்சார்பு, அறம், ஒழுக்கப்போதனை, புலமை வெளிப்பாடு போன்ற நிலைகளில் நின்று பாடப்பட்ட கடினமான செய்யுட் போக்கைக் கொண்டனவாக விளங்கி வந்துள்ளமையினை அவதானிக்க முடிகின்றது. ‘இன்று மரபாகத் தோன்றுவது ஒருகாலத்தின் புதுமையே என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். ஆகவே இன்றைய புதுமை என்பதும் நாளைய மரபே…’(13) என்பதை நாம் மனதில் நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும். ஆறுமுகநாவலரால் ஆரம்பித்து வைக்கப்பட்ட சைவசமய ஆசாரம் பேணும் இறுக்கமான செய்யுள், பிரபந்த நடையினை ஈழத்தில் கவிதை எழுதிய ஆரம்ப கர்த்தாக்களிடம் காணமுடிகின்றது. அ.குமாரசுவாமிப் புலவர், சுவாமி.விபுலாநந்தர், வித்துவ சிரோன்மணி.சி