கல் நெஞ்சும் கசிந்துருக...

கல் நெஞ்சும் கசிந்துருக, இன்று
கையேந்தும் நிலை வந்தும்
சொல் பொறுக்காச் சோர்விலராய்
கைகட்டி நிற்காத ஏர் பிடித்த
நல் மனிதர் வல் வினையால் வாழ்விழந்து
வாழாவெட்டி ஆகி நின்று
நெல் மணிக்கும் வரிசை கட்டி
கையேந்தும் நிலை கொடிது.

பார் போற்ற வாழ்ந்திருந்து
பசி விலக்கி வாழ்ந்தவர்கள்
ஏர் பிடித்த கையாலே அள்ளி அள்ளிக்
கொடுத்தவர்கள்- வந்தாரை வரவேற்று
ஊர் மெச்ச உபசரித்தோர் நாதியற்று நடுத்
தெருவில் அகதியாய் அலைகிறாரே
போர் ஓய்ந்த பின்னாலும் ஊர் ஏக முடியாத
கொடுமையினை யாருணர்வார்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.2. ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

2.2. ஆரியச்சக்கரவர்த்திகள் கால இலக்கியங்களின் சிறப்பியல்புகள் (பண்புகள்)