ஆறாந்திணை - 03
நெய்தல்:- கடலும் கடல் சார்ந்த இடமும்

பல்லாயிரம் உயிர் தின்றும்
அடங்காது ஆர்ப்பரிக்கும் கடல்
இரைச்சல் நிறைந்த உலகின்
சொந்தக்காரனாகிப் பயமுறுத்தும் பூதம்.
எம் மனம் போல்
அமைதியின்றிப் பாய்கிறது
நீல நீர்.
பெருகி வந்து உயிர் குடித்து
உயிர்ச் சுவடழித்து - எம்
நிம்மதியைக் குலைத்து
எம்மை நிர்க்கதியாக்கிய அலை.
மணல்த் திட்டால் மூடி
எதுவும் நடவாதது போல்
பாசாங்கு செய்யும்
நீண்ட கரை
எல்லாம் ஒன்றுகூடி
இரைகிறது
இன்னும் வேண்டுமென்று.
கலங்க வைக்கிறீங்க தியா. :(
பதிலளிநீக்கு//எம் மனம் போல்
பதிலளிநீக்குஅமைதியின்றிப் பாய்கிறது
நீல நீர்.//
அருமை தியா.
அலைகள் ஓய்வதில்லை....
பதிலளிநீக்குஅருமை!
//எதுவும் நடவாதது போல்
பதிலளிநீக்குபாசாங்கு செய்யும்
நீண்ட கரை//
அட நல்லாயிருக்குங்க...
//எம் மனம் போல்
பதிலளிநீக்குஅமைதியின்றிப் பாய்கிறது
நீல நீர்.//
அருமையான உவமை...
மணல் திட்டு உவமை மூலம் கடல் திட்டும் கவிதை அருமை.
பதிலளிநீக்கு//
பதிலளிநீக்குகலங்க வைக்கிறீங்க தியா. :(
//
நன்றி வானம்பாடிகள்
சுனாமியை நினைத்துதான் எழுதினேன்
//
பதிலளிநீக்குஅருமை தியா.
//
உங்கள் பாராட்டுக்கு நன்றி சுசி
//
பதிலளிநீக்குஅலைகள் ஓய்வதில்லை....
அருமை!
//
உங்கள் பாராட்டுக்கு நன்றி anto
//
பதிலளிநீக்குஎதுவும் நடவாதது போல்
பாசாங்கு செய்யும்
நீண்ட கரை
//
//
அட நல்லாயிருக்குங்க...
//
உங்கள் பாராட்டுக்கு நன்றி வசந்த்
//
பதிலளிநீக்குஎம் மனம் போல்
அமைதியின்றிப் பாய்கிறது
நீல நீர்.
//
//
அருமையான உவமை...
//
இப்படி ஒரு நல்ல உவமை இருப்பதை இப்பதான் நான் பார்த்தேன்
உங்கள் பாராட்டுக்கு நன்றி அகல் விளக்கு
//
பதிலளிநீக்குமணல் திட்டு உவமை மூலம் கடல் திட்டும் கவிதை அருமை.
//
உங்கள் பாராட்டுக்கு நன்றி rajesh