ஆறாந்திணை - 04

குறிஞ்சி :- மலையும் மலைசார்ந்த இடமும்.




மலையொத்த மனிதரெல்லாம்

ஏதிலியாய்வாழ்விழந்து

ஒருவர் பின் ஒருவராக

சிறைப்பட நடந்தனர்.



சிறுமலைகள் கூடிநின்ற

பூமியைப் புறங்கண்ட

பின்னொரு நாளில்

மலைக்காடுகள் ஒன்றுகூடி

மலைகளை மெல்ல மெல்லத்

தின்றுகொண்டிருந்தன.



மக்களையும் மண்ணையும்

நீண்ட மலைத் தொடர்கள்

பிரித்துக் கூறு போட்டபோது

சூரியன் மலை இடுக்கில்

விழுந்து இறந்து போனான்.

நட்சத்திரங்கள் ஒன்றன்பின் ஒன்றாக

உதிர்ந்துகொண்டிருந்தன.

நிலவு தேய்ந்து தேய்ந்து

மறைந்து போனது.

இன்னும்....

மனிதர் மட்டும் ஏதிலியாய்

இழந்தவற்றை நினைத்தபடி

வான் பார்த்து............



கருத்துகள்

  1. மனம் கனக்கும் வார்த்தை முத்துக் கோர்வை. பாராட்டுக்கள் தியா.

    பதிலளிநீக்கு
  2. அருமையான கவிதை.

    //இழந்தவற்றை நினைத்தபடி

    வான் பார்த்து............//

    உண்மை.

    பதிலளிநீக்கு
  3. //மனம் கனக்கும் வார்த்தை முத்துக் கோர்வை. பாராட்டுக்கள் தியா.
    //

    நன்றி வானம்பாடிகள்,

    முத்துக் கோர்வை என்று சொன்னீர்கள் ஆனால் எல்லாம் உண்மையான முத்துக்கள் அன்பரே

    பதிலளிநீக்கு
  4. //
    அருமையான கவிதை.
    //

    நன்றி ராமலக்ஷ்மி

    பதிலளிநீக்கு
  5. அருமையாய் வந்திருக்கு தியா.மனசு கனத்து போகிறேன்..

    பதிலளிநீக்கு
  6. அருமை தியா..

    //இன்னும்....

    மனிதர் மட்டும் ஏதிலியாய்

    இழந்தவற்றை நினைத்தபடி

    வான் பார்த்து............//

    வலிக்கும் உண்மை...

    பதிலளிநீக்கு
  7. //
    அருமையாய் வந்திருக்கு தியா.மனசு கனத்து போகிறேன்..
    //


    நன்றி பா.ராஜாராம்

    நான் ஐவகை நிலங்களுடன் ஆராந்திணையாக
    பனியும் பனி சார்ந்த இடமும் சொல்லப் போறேன்.
    ஆனால்
    எல்லாவற்றையும் வித்தியாசமாய்
    குறிப்பாக மறுபக்கத்தைக் (உண்மையைக்) காட்டுவதால்
    வலிக்கிறது

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....

அன்புடன்
-தியா-

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.2. ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

2.2. ஆரியச்சக்கரவர்த்திகள் கால இலக்கியங்களின் சிறப்பியல்புகள் (பண்புகள்)