ஆறாந்திணை - 05
பாலை :- மணலும் மணல் சார்ந்த இடமும்.
மணல் தின்ற புல்வெளி
அனல் தின்ற பனந்தோப்பு
புதையுண்டு எரியுண்ட
மீதிக் காடுகள் எல்லாம்
மணல் மேடாய்த் திட்டுகளாய்...
எரியுண்ட தேசத்தில்
சிதைவுகள் மட்டுமே மீதியாக...
கால் மிதிக்கும் இடமெல்லாம்
பல்லிளிக்கும் கூரிய முட்கள்
யுத்த காண்டம் முடிந்த பின்னர்
சிதைவுகளாய் எச்சசொச்சம்.
வாழ்விழந்த வயல்வெளிகள்
பொலிவிழந்து...
பூவிழந்து தளிரிழந்து...
கருகி நிற்கும் மரங்கொடிகள்...
சிதைவுகளைச் சுமந்தபடி
தனித்திருக்கும் வீதிகளும் வீடுகளும்...
மீண்டும் ஓர் நாள்
தோண்டப்படுவதற்காய்
காத்திருக்கும் மண்தரைகள்
எல்லாம் ஒன்றுகூடி
எரியுண்ட தேசத்தின்
காட்சிகளாகிப் படமெடுக்க
நான் மட்டும் ...
இழந்தவற்றைத் தேடியபடி
மீண்டும்... மீண்டும்...........
நான் மட்டும் ...
பதிலளிநீக்குஇழந்தவற்றைத் தேடியபடி
மீண்டும்... மீண்டும்.//
பாலைத்தினையின் வெறுமையும் கசப்பும்
கண் முன் நிற்கிறது!!
எரியுண்ட தேசத்தில்
பதிலளிநீக்குசிதைவுகள் மட்டுமே மீதியாக...
கால் மிதிக்கும் இடமெல்லாம்
பல்லிளிக்கும் கூரிய முட்கள்
யுத்த காண்டம் முடிந்த பின்னர்
சிதைவுகளாய் எச்சசொச்சம்.//
சிதைகளும் சிதைவுகளாய்......
பிணம் தின்னும் பூமியாய்.......
இன்னும் என்ன என்னவோவாய்......
ஆகிப்போன பூமியில் எதைத்தேடுவது....எதைத்தேடினாலும் கிடைப்பதென்னவோ....வலிகள் மட்டும்தான்.
கண்முன்னே காட்சிகள் நிழலாடுகிறது
பதிலளிநீக்குஅருமை தியா
//பொலிவிழந்து...
பதிலளிநீக்குபூவிழந்து தளிரிழந்து...
கருகி நிற்கும் மரங்கொடிகள்...
சிதைவுகளைச் சுமந்தபடி
தனித்திருக்கும் வீதிகளும் வீடுகளும்...//
இன்றைய நிலை இன்னும் தொடர்ந்தால் இதுவும் நடக்கும்....
//யுத்த காண்டம் முடிந்த பின்னர்
பதிலளிநீக்குசிதைவுகளாய் எச்சசொச்சம்.//
ப்ச் ப்ளீஸ் ரொம்ப வலிமிகுந்த வரிகளை எழுதாதீங்க.....
//
பதிலளிநீக்குநான் மட்டும் ...
இழந்தவற்றைத் தேடியபடி
மீண்டும்... மீண்டும்.//
பாலைத்தினையின் வெறுமையும் கசப்பும்
கண் முன் நிற்கிறது!!
//
தேவன் மாயம் , நன்றி உங்கள் பதிலுக்கு
//
பதிலளிநீக்குசிதைகளும் சிதைவுகளாய்......
பிணம் தின்னும் பூமியாய்.......
இன்னும் என்ன என்னவோவாய்......
ஆகிப்போன பூமியில் எதைத்தேடுவது....எதைத்தேடினாலும் கிடைப்பதென்னவோ....வலிகள் மட்டும்தான்.
//
ஆரூரன் விசுவநாதன் , நன்றி உங்கள் பதிலுக்கு
நீங்கள் சொல்வது உண்மைதான்
காலம்தான் பதில் சொல்ல வேண்டும்
//
பதிலளிநீக்குகண்முன்னே காட்சிகள் நிழலாடுகிறது
அருமை தியா
///
மலிக்கா நன்றி
என்ன செய்வது சிலருக்கு அதுவே வாழ்வாகிவிட்டது.
//
பதிலளிநீக்குஇன்றைய நிலை இன்னும் தொடர்ந்தால் இதுவும் நடக்கும்....
//
உண்மைதான் க.பாலாஜி
//
பதிலளிநீக்கு//யுத்த காண்டம் முடிந்த பின்னர்
சிதைவுகளாய் எச்சசொச்சம்.//
ப்ச் ப்ளீஸ் ரொம்ப வலிமிகுந்த வரிகளை எழுதாதீங்க.....
///
என்ன வசந்த் ஏன்?
இதுதானே நடக்குது.
உண்மை சுடுகிறது... படித்தாலே வலிக்கிறது...கண்ணில் நீர் வருகிறது...
பதிலளிநீக்குஇது பொய்யாக இருக்கக்கூடாதா என்ற ஆதங்கமும் மனதில் எழுகிறது...
நல்லா எழுதி இருக்கீங்க...
வாழ்த்துக்கள்... சில கண்ணீர் துளிகளுடன்...
இழந்தவற்றை
பதிலளிநீக்குஇனம் கண்டு அதில் உன்
மனம் கொண்டு
ரணம் சொல்லிவிட்டாய்.
பாளைபோல் தழைத்த
இடமெல்லாம்
பாலையாகிவிட்டால்
நாளையும் பிறக்குமோ!
நம் குடியும் பிழைக்குமோ!!
நன்றி தியா....
//
பதிலளிநீக்குஉண்மை சுடுகிறது... படித்தாலே வலிக்கிறது...கண்ணில் நீர் வருகிறது...
இது பொய்யாக இருக்கக்கூடாதா என்ற ஆதங்கமும் மனதில் எழுகிறது...
நல்லா எழுதி இருக்கீங்க...
வாழ்த்துக்கள்... சில கண்ணீர் துளிகளுடன்...
//
என்ன செய்வது சிலருக்கு அதுவே வாழ்வாகிவிட்டது.
R.Gopi நன்றி
//
பதிலளிநீக்குஇழந்தவற்றை
இனம் கண்டு அதில் உன்
மனம் கொண்டு
ரணம் சொல்லிவிட்டாய்.
பாளைபோல் தழைத்த
இடமெல்லாம்
பாலையாகிவிட்டால்
நாளையும் பிறக்குமோ!
நம் குடியும் பிழைக்குமோ!!
//
நன்றி சந்தான சங்கர் உங்கள் பதிலுக்கு.
நீங்கள் சொல்வது உண்மைதான்
காலம்தான் பதில் சொல்ல வேண்டும்
நல்லா இருக்குங்க கவிதை
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்
//
பதிலளிநீக்குநல்லா இருக்குங்க கவிதை
வாழ்த்துக்கள்
//
நன்றி நேசமித்ரன்
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்கு