மனிதாபிமானம்
பேருந்தில் அந்த ஊனமுற்றவர் மிகவும் சிரமப்பட்டு ஏறி ஒவ்வொருவராக மன்றாடிப் பிச்சை கேட்டுக்கொண்டிருந்தார். யாரும் கொடுப்பதாகத் தெரியவில்லை.
சிலர் பார்த்தும் பாராது போல் இருந்தனர். வேறு சிலர் முகத்தை வெளியே திருப்பி கண்ணாடி யன்னலூடாக வெளியே பார்த்து விறைத்திருந்தனர்
இன்னும் பலர் காதில் வயர் மாட்டி கைப்பேசியில் பாடல் கேட்டு ரசித்தபடி அமர்ந்திருந்தனர்.
அந்த ஊனமுற்ற முதியவரோ ஏமாற்றத்துடன் எல்லோரையும் பார்த்தார். யாரும் அவரைப் பார்த்ததாகத் தெரியவில்லை.
ஈற்றில் வெறுமையான தன் பிச்சைப் பாத்திரத்தை ஒருதடவை பார்த்துப் பெருமூச்சு விட்டபடி பேருந்தில் இருந்து இறங்க முற்பட்டார்.
அவரைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. உதவி செய்யவேண்டும் போல் மனம் துடித்தது. மெதுவாக என் ஊன்றுகோலை குத்தி நிலையெடுத்துக் கொள்கிறேன். பின்னர் கைகொடுத்து அவரை இறக்கிவிட்டு...
அவருக்கு ஒரு ரூபாயாவது கொடுக்க வேண்டும் என்ற துடிப்புடன் குனிந்து என் பாத்திரத்தைப் பார்க்கிறேன். அதுவும் வெறுமையாக.........
அவருக்கு ஒரு ரூபாயாவது கொடுக்க வேண்டும் என்ற துடிப்புடன் குனிந்து என் பாத்திரத்தைப் பார்க்கிறேன். அதுவும் வெறுமையாக.........
பதிலளிநீக்குகிளாஸ்
//
பதிலளிநீக்குஅவரைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. உதவி செய்யவேண்டும் போல் மனம் துடித்தது. மெதுவாக என் ஊன்றுகோலை குத்தி நிலையெடுத்துக் கொள்கிறேன். பின்னர் கைகொடுத்து அவரை இறக்கிவிட்டு...
அவருக்கு ஒரு ரூபாயாவது கொடுக்க வேண்டும் என்ற துடிப்புடன் குனிந்து என் பாத்திரத்தைப் பார்க்கிறேன். அதுவும் வெறுமையாக.....//
உணர்வினை விமர்சிக்க இயலவில்லை...
நேரில் நின்ற காட்சியென தேங்குகின்ற என் கண்ணீர் போதும்...
//
பதிலளிநீக்குஅவரைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. உதவி செய்யவேண்டும் போல் மனம் துடித்தது. மெதுவாக என் ஊன்றுகோலை குத்தி நிலையெடுத்துக் கொள்கிறேன். பின்னர் கைகொடுத்து அவரை இறக்கிவிட்டு...
//
நன்றி S.A. நவாஸுதீன்
//உணர்வினை விமர்சிக்க இயலவில்லை...
பதிலளிநீக்குநேரில் நின்ற காட்சியென தேங்குகின்ற என் கண்ணீர் போதும்...//
நன்றி அகல் விளக்கு
கவிதைதனமான முடிவு
பதிலளிநீக்குநன்றாக இருக்கிறது
முயற்சிகளின் தொடரட்டும்
எப்படிங்க இப்படி யோசிச்சீங்க. இவ்வளவு சுருக்கமா இவ்வளவு கனம் ஏத்திட்டிங்க தியா. அற்புதம். பாராட்டுகள்.
பதிலளிநீக்குஉங்கள் பாராட்டுக்கு நன்றி நேசமித்ரன்
பதிலளிநீக்கு//எப்படிங்க இப்படி யோசிச்சீங்க. இவ்வளவு சுருக்கமா இவ்வளவு கனம் ஏத்திட்டிங்க தியா. அற்புதம். பாராட்டுகள்.
பதிலளிநீக்கு//
குறுங்கதைதானே அதுதான் சுருக்கமாக சொன்னேன்
பாராட்டுக்கு நன்றி வானம்பாடிகள்
கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது போல்
பதிலளிநீக்குசின்னதா சொன்னாலும் நறுக்குன்னு சொல்லிட்டீங்க தியா வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்...முயற்சி தொடரட்டும்
//கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது போல்
பதிலளிநீக்குசின்னதா சொன்னாலும் நறுக்குன்னு சொல்லிட்டீங்க தியா வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்...முயற்சி தொடரட்டும்//
உங்கள் பாராட்டுக்கு நன்றி வசந்த்
எளிமையான வார்த்தைகளால் வலியை வலிமையாக சொல்லியுள்ளீர்கள்....வாழ்த்துக்கள் தோழா....
பதிலளிநீக்கு//எளிமையான வார்த்தைகளால் வலியை வலிமையாக சொல்லியுள்ளீர்கள்....வாழ்த்துக்கள் தோழா....//
பதிலளிநீக்குஉங்கள் பாராட்டுக்கு நன்றி anto
மனது கனக்கிறது
பதிலளிநீக்கு//
பதிலளிநீக்குமனது கனக்கிறது
//
உண்மைதான் நண்பா சமுகம் எப்படியெல்லாம் போகுது நினைக்க கவலையாக இருக்கிறது.
கதிர் - ஈரோடு நன்றி