முற்றுப்பெறாத சீவியம்.





















கொட்டித்
தீர்க்கப்படும்
வன்மங்களிடையே மெல்ல மெல்ல
புதைந்து கொண்டிருக்கிறது
என் ஆன்மா.

இறுதிவரை வாழவைப்போம்
நன்றாக என்று
கைப்பிடித்தவர்கள்
இடைநடுவே
காணாமல் போனபின்னர்
எப்படியாயினும்
வாழப் பழகிக் கொண்டு
தொடர்கிறது என்
முற்றுப்பெறாத சீவியம்.

கருத்துகள்

  1. வலிக்கும் சொற்களின் நிதர்சனம்

    பதிலளிநீக்கு
  2. //இறுதிவரை வாழவைப்போம்
    நன்றாக என்று
    கைப்பிடித்தவர்கள்
    இடைநடுவே
    காணாமல் போனபின்னர்//

    தன்னம்பிக்கை மட்டும் இருந்தால் போதும். பிறர் மீது நம்பிக்கை வேண்டாம். நல்ல கவிதை.

    பதிலளிநீக்கு
  3. //காணாமல் போனபின்னர்
    எப்படியாயினும்
    வாழப் பழகிக் கொண்டு
    தொடர்கிறது என்
    முற்றுப்பெறாத சீவியம். //

    இன்னும் தைரியத்துடன்....

    கவிதை நன்று....

    பதிலளிநீக்கு
  4. //
    வலிக்கும் சொற்களின் நிதர்சனம்
    //

    உண்மைதான் நன்றி நேசமித்ரன்

    பதிலளிநீக்கு
  5. ஈ ரா உங்கள் பாராட்டுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  6. //
    தன்னம்பிக்கை மட்டும் இருந்தால் போதும். பிறர் மீது நம்பிக்கை வேண்டாம். நல்ல கவிதை.
    //
    புலவன் புலிகேசி நன்றி

    பதிலளிநீக்கு
  7. ///
    இமைகள் நனைகின்றன...
    ///

    அதுக்கும் கொஞ்சநாளில் வற்றிவிடும் போல் இருக்கு

    rajan RADHAMANALAN நன்றி

    பதிலளிநீக்கு
  8. க.பாலாசி உங்கள்கருத்துக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  9. உங்கள்கருத்துக்கு நன்றி மண்குதிரை

    பதிலளிநீக்கு
  10. முற்றுப்பெறாத சீவியம்
    முற்றுப்பெறும்
    நம்பிக்கைகள்
    சீவப்பட்டாலும்
    தன்னம்பிக்கையின் முன்..

    பதிலளிநீக்கு
  11. //
    முற்றுப்பெறாத சீவியம்
    முற்றுப்பெறும்
    நம்பிக்கைகள்
    சீவப்பட்டாலும்
    //
    நன்றி சந்தான சங்கர்

    பதிலளிநீக்கு
  12. மலிக்கா உங்கள்கருத்துக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  13. இதுவும் கடந்து போகும்............................................

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....

அன்புடன்
-தியா-

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.2. ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

2.2. ஆரியச்சக்கரவர்த்திகள் கால இலக்கியங்களின் சிறப்பியல்புகள் (பண்புகள்)