சொற்சிலம்பம் - நான்கு
இலங்கையிலும்தமிழ் நாட்டிலும் தமிழ் பேசபட்டாலும் இரண்டுக்கும் இடையில் பெரியளவிலானஉச்சரிப்பு வேறுபாட்டினை அவதானிக்கலாம் . இலங்கையிலும் பிரதேசத்துக்கு பிரதேசம் இந்த மாறுதல் உள்ளது . அதேபோல் தமிழகத்திலும் உண்டு . ஆனால் , இலங்கைத் தமிழுக்கும் தமிழகத் தமிழுக்கும் இடையில் பல சொற்கள் வேறுபட்டு வழங்கக் காணலாம் . அவற்றினை புரிதல் விரும்பி இங்கு பதிவிலிடுகிறேன் . '' மொழி என்பது ஒன்றை அடையாளப் படுத்தும் கருவி '' என்ற கொள்கை உடையவன் நான் . ஆதலால் , இங்கு எது சரி எது பிழை என்ற வாதப் பிரதிவாதங்களுக்கு அப்பால் நான் இருந்துகொள்ள ஆசைப்பட்டு இதனைத் தொடர்கிறேன் . ( முக்கிய குறிப்பு - இவை என்னால் அவதானிக்கப் பட்ட சொற்கள் மட்டுமேயன்றி ஆய்வல்ல . சில சொற்கள் தமிழ் அல்லவெனினும் தமிழ்போல் வழங்கப்பட்டு வருகின்றமையால் நானும் அப்படியே சொல்லியுள் ளேன் .) இலங்கைத் தமிழ்ச் சொற்கள் தமிழ் நாட்டுத் தமிழ்ச் சொற்கள் முகம்