ஈழத்து சிறுகதைக் களம் - ஓர் அறிமுகம் ( தொடர்- 04 )
2. போரின் விளைவுகள்
1983இல் நிகழ்ந்த இனக் கலவரத்தின் பின்னர் தமிழரின் இயல்பு வாழ்க்கையானது மிகவும் பாதிக்கப் பட்ட நிலையில் 1987இல் (ஒப்பறேஷன் லிபறேஷன்) வடமராட்சித் தாக்குதல் , மற்றும் இந்திய இராணுவத்தின் ‘ஒப்பறேசன் பூமாலை’ நடவடிக்கை அதன் பின்னர் அமைதிப் படையுடன் அதே ஆண்டு ஒக்ரோபர் 10இல் நடந்த மோதல் ஆகிய புறக் காரணிகளின் மூலம் முதன் முறையாக மக்கள் யாழ்ப்பாணக் குடாவுக்குள்ளேயே இடம்பெயர்ந்தனர்.
இந்திய இராணுவச்சூழலானது மக்களைச் சொல்ல முடியாத சிக்கலில் தள்ளியது. இந் நிலையில் குடாநாட்டு எழுத்தாளர்கள் மட்டுமன்றி ஒட்டுமொத்த ஈழத் தமிழ் எழுத்தாளர்கள் நேரடியாக எதையாவது எழுதப் பயந்தனர்.
இத்தகைய சூழ்நிலையில் இந்திய இராணுவம் 1990-03-25 அன்று இலங்கையை விட்டு வெளியேறிய போது நிலவிய யு.என்.பி. ஆட்சியும் அதன் பின் வந்த எஸ்.எல்.எப்.பி. ஆட்சியும் படையெடுப்பு , போர் நடவடிக்கைகளில் குறியாக இருந்தமையினால் அதே சம காலத்தில் அதன் விளைவுகளினால் யாழ் - கண்டி வீதியும் மூடப் பட்டது.
1994இல் ஏற்பட்ட குடாநாடு தழுவிய முழுமையானயுத்தம் , முஸ்லீம்களின் வெளியேற்றம் , முன்னேறிப்பாய்தல் , இடிமுழக்கம் , சூரியக்கதிர் என மாறி மாறி மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கைகள் காரணமாக 1995ஆம் ஆண்டு ஒக்ரோபர் 10இல் ஏற்பட்ட வலிகாம இடப்பெயர்வும் அதன்பின்னர் அதே ஆண்டின் இறுதியில் (1995-12-05) யாழ் நகரை இலங்கை இராணுவம் கைப்பற்றியது வரையிலான காலப்பகுதிகளை உள்ளடக்கியதாக இக் காலப்பிரிப்பு அமைந்து காணப்படுகின்றது.
1985 – 1995 வரையான ஒரு தசாப்த காலத்தில் மக்கள் அனுபவித்த இன்னல்களினை , சோகங்களின் மத்தியில் வாழ்க்கைச் சவால்களினை எதிர்கொண்ட தன்மை ஆகியனவற்றைக் கதைக்கருவாகக் கொண்டு , இந்த மண்ணில் நிகழ்ந்த வாழ்க்கைச் சிதறல்களுக்கு மத்தியில் , இதற்குள் நின்றுகொண்டே முகங்கொடுத்த தன்மையினையும் பலருடைய கதைகளினுடே துல்லியமாகக் காணமுடிகின்றது. எனவே இரு தசாப்த காலப் பதிவுகளினைப் பின் நோக்கிப் பார்க்கின்ற போது 1985 – 1995 வரையான காலகட்டத்தில் எழுதப்பட்ட சிறுகதைகளின் உள்ளடக்கமாக மேற்படி தன்மைகள் விளங்குவதைக் காணமுடிகின்றது.
1985 - 1995 வரையான சிறுகதைகளினை அவற்றின் பேசுபொருட்களின் தன்மைகளுக்கு ஏற்ப பின்வரும் சிறு தலைப்புகளின் கீழ் உள்ளடக்கிப் பார்க்க முடிகின்றது.
அ . சொத்திழப்பு
ஆ . புலம்பெயர்வும் அதன் விளைவுகளும்
இ . அன்றாட போர்க்கால வாழ்வின் சித்திரிப்பு
ஈ . சமூகப் பிறழ்வு பற்றிய பார்வை
உ . சாதாரண சம்பவச் சித்திரிப்பு
அ . சொத்திழப்பு
வாழ்க்கையே போராட்டமாகவும் போரே வாழ்க்கையாகவும் மாறிவிட்ட ஈழத் தமிழர்களின் அவலங்கள் எண்ணில் அடங்காதவை. இத்தகைய மக்களின் சோகவாழ்வினை உள்வாங்கிக் கொண்டு சமூகத்துடன் ஒட்டிய பார்வையாகப் பல எழுத்தாளர்கள் தமது சிறுகதைகளினைப் படைத்துள்ளமை சிறப்பானதாகக் காணப்படுகின்றது.
1987இல் இடம் பெற்ற ‘ஒபரேஷன் லிபரேஷன்’ படை நடவடிக்கையின் தாக்கம், நாடு முழுவதும் பெரும் சொத்தழிவு, பொருட்களின் நாசம், குடியிருப்பு அழிவு, போன்ற பல பின்விளைவுகளினைக் கொண்டு வந்தது. மக்கள் மத்தியில் பீதியான, நிம்மதியற்ற , தூக்கமற்ற இரவுகளினையும் , துணையற்ற வாழ்வு நிலையினையும் மட்டுமே பரிசாகத் தந்தது.
இராணுவ நகர்வுகள் , படை நடவடிக்கை , தரை மார்க்கமாகவும் , ஆகாய மார்க்கமாகவும் , கடல் மார்க்கமாகவும் நடைபெற்ற தாக்குதல்கள் , பீரங்கி வெடிகள் , கண்ணிவெடிகள் , போன்றனவற்றின் கொடூரப் பிடியில் சிக்கி மனித வாழ்க்கை அல்லோல கல்லோலப்பட்டது. உயிர்கள் , உடைமைகள் மாத்திரமின்றி உயர் ஒழுக்கங்களும் இழக்கப்பட்டன.
இரணுவ படை நகர்வினால் வீட்டினை , உடைமைகளினை இழந்து கையறு நிலையில் எதுவுமே செய்யத் திராணியற்று நிற்கும் பல குடும்பங்களினை , அழிபாடுகளுக்குள் சிக்குண்டு சித்தம் கலங்கித் தவிக்கும் , குடிமக்களின் சோகக் கதையினைப் பல கதைகளின் மூலம் எடுத்துக்காட்டினர்.
நிர்கதியான நிலைக்குத் தள்ளப்பட்ட பல குடும்பங்கள் தமது இருப்பிடங்களினை இழந்து தவித்தனர். வளம் நிறைந்த காணிகளையும் , வீடு, நிலங்களையும் இழந்து எவ்விதமான வருமானமும் அற்றவர்களாக அகதிகளாக்கப் பட்டனர். காணிகள் அனைத்தும் இழந்து போன கையறு நிலையில், அன்றாடம் உழைத்து கூலி பெற்றுவந்த ஏழைக் குடும்பங்கள் தமது துண்டுக் காணிகளையும் இழந்து, இருக்க இடமின்றி அலைந்த அவல நிலையின் சம்பவச் சித்திரிப்புகளாக யதார்த்தப் பண்புடன் அக்காலச் சிறுகதைகள் அமைந்து விளங்கின.
தொடரும் ...

mm
பதிலளிநீக்கு//
பதிலளிநீக்குகலகலப்ரியா கூறியது...
mm
//
நன்றி கலகலப்ரியா
ஆழமான ஆராய்ச்சி... நல்ல பதிவு தியா.
பதிலளிநீக்குஅலசல்...அசத்தல்.
பதிலளிநீக்கு//
பதிலளிநீக்குசுசி கூறியது...
ஆழமான ஆராய்ச்சி... நல்ல பதிவு தியா.
November 9, 2009 5:54 PM
//
உங்கள் மதிப்பீட்டுக்கு நன்றி சுசி
//
பதிலளிநீக்குசி. கருணாகரசு கூறியது...
அலசல்...அசத்தல்.
November 9, 2009 5:59 PM
//
நன்றி சி. கருணாகரசு
இதை ஒரு சிறபான வழிகாட்டியாக கொண்டு வருகிறீர்கள் தியா. நன்றி.
பதிலளிநீக்கு//
பதிலளிநீக்குவானம்பாடிகள் கூறியது...
இதை ஒரு சிறபான வழிகாட்டியாக கொண்டு வருகிறீர்கள் தியா. நன்றி.
November 9, 2009 8:38 PM
//
உங்கள் மதிப்பீட்டுக்கு நன்றி வானம்பாடிகள்
//1985 – 1995 வரையான ஒரு தசாப்த காலத்தில் மக்கள் அனுபவித்த இன்னல்களினை , சோகங்களின் மத்தியில் வாழ்க்கைச் சவால்களினை எதிர்கொண்ட தன்மை ஆகியனவற்றைக் கதைக்கருவாகக் கொண்டு , இந்த மண்ணில் நிகழ்ந்த வாழ்க்கைச் சிதறல்களுக்கு மத்தியில் , இதற்குள் நின்றுகொண்டே முகங்கொடுத்த தன்மையினையும் பலருடைய கதைகளினுடே துல்லியமாகக் காணமுடிகின்றது.//
பதிலளிநீக்குநெஞ்சை அழுத்தும் உண்மை!
-கேயார்
//
பதிலளிநீக்குஇன்றைய கவிதை கூறியது...
நெஞ்சை அழுத்தும் உண்மை!
-கேயா
உண்மைதான் நன்றிங்,க இன்றைய கவிதை
nalla pathivu thiya
பதிலளிநீக்கு//
பதிலளிநீக்குபுலவன் புலிகேசி கூறியது...
nalla pathivu thiya
November 10, 2009 9:31 AM
//
நன்றி புலவன் புலிகேசி