சொற்சிலம்பம் - ஒன்று


இலங்கையிலும் தமிழ் நாட்டிலும் தமிழ் பேசபட்டாலும் இரண்டுக்கும் இடையில் பெரியளவிலான உச்சரிப்பு வேறுபாட்டினை அவதானிக்கலாம். இலங்கையிலும் பிரதேசத்துக்கு பிரதேசம் இந்த மாறுதல் உள்ளது. அதேபோல் தமிழகத்திலும் உண்டு. ஆனால், இலங்கைத் தமிழுக்கும் தமிழகத் தமிழுக்கும் இடையில் பல சொற்கள் வேறுபட்டு வழங்கக் காணலாம். அவற்றினை புரிதல் விரும்பி இங்கு பதிவிலிடுகிறேன்.

''மொழி என்பது ஒன்றை அடையாளப் படுத்தும் கருவி '' என்ற கொள்கை உடையவன் நான். ஆதலால் , இங்கு எது சரி எது பிழை என்ற வாதப் பிரதிவாதங்களுக்கு அப்பால் நான் இருந்துகொள்ள ஆசைப்பட்டு இதனைத் தொடர்கிறேன்.

(முக்கிய குறிப்பு - இவை என்னால் அவதானிக்கப் பட்ட சொற்கள் மட்டுமேயன்றி ஆய்வல்ல. சில சொற்கள் தமிழ் அல்லவெனினும் தமிழ்போல் வழங்கப்பட்டு வருகின்றமையால் நானும் அப்படியே சொல்லியுள்ளேன்.)

இலங்கைத் தமிழ்ச் சொற்கள்
தமிழ் நாட்டுத் தமிழ்ச் சொற்கள்

இருங்கள் உக்காருங்கள்
( காப்பி )குடியுங்கள் சாப்பிடுங்கள்
சுகமா இருக்கிறீங்களா? நல்லா இருக்கிறீங்களா? , சவுக்கியமா?
கெதியாய் சீக்கிரம்
நக்கல், நையாண்டி, பகடி காமடி, கிண்டல்
சும்மா இருக்கிறேன் வெட்டியா இருக்கிறேன்.
செய் பண்ணு
கதை பேசு
பேசு திட்டு
ஓம் ஆம், ஆமாம்
விருப்பம் பிடிக்கும்
விளங்கேல்லை புரியேல்லை
பிறகு, பேந்து அப்புறம்
தாள்க்காசு நோட்டு
பெண் பொண்ணு
ஆண் பையன், பிள்ளை
குழப்படி வால்
சத்தம் போடாமலிரு 'கம்'மெண்டிரு
நல்ல பிள்ளை சமத்து
குறைய, கொஞ்சம் கம்மி
கூட ஜாஸ்தி
எங்கே போறீங்கள்? எங்க கிளம்புறிங்க?
கதவச் சாத்து, பூட்டு கதவ மூடு
திறப்பு சாவி

மச்சம் கவுச்சி
வாளைமீன் முள்ளுவாளை
சூடைமீன் கவளை மீன்
சாதாளை வாளைமீன்
துள்ளுமண்டன் சங்கரா
கெழுறு கெழுத்தி
றால் றா
அறக்குளாய் வஞ்சிரம்

இன்னும் வளரும்.....



கருத்துகள்

  1. சுகமா இருக்கிறீங்களா?

    (சுக)மா.. இருக்கீ..ங்களா...

    இப்படிதான் pronounce panranga..

    maybe srilankan slangs distrubs their language or malayalam

    என்னால் சிறிலங்கன் தமிழர்களிடம் உரையாடும்போது.. சரியாக புரிந்துக்கொள்ள முடியவில்லை.

    பதிலளிநீக்கு
  2. நீங்கள் இலங்கைத் தமிழ் சொற்கள் என்று குறிப்பிட்டுள்ள அனைத்து சொற்களும் தென் தமிழகத்தில்(குறிப்பாக நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்கள் ) இன்று பழக்கத்தில் உள்ள வார்த்தைகள்....தென்னகத்து தமிழ்க்கும் தமிழகத்தின் பிற பகுதிகளிற்கும் பேச்சுத் தமிழ் நிறைய மாறுபடும்...!

    பதிலளிநீக்கு
  3. திறப்பு - திறவுகோல் மருவி தொரவால் என்று தென் தமிழகத்தில் சொல்வார்கள்.

    பதிலளிநீக்கு
  4. பல வட்டார வழக்குகளில் இலங்கைத் தமிழ் அப்படியே அல்லது சிறிது மாற்றங்களுடன் புழங்கப் படுகிறது

    மதுரை, திருநெல்வேலி வட்டாரத்தில் பிள்ளை என்பது பெண்பிள்ளையைக் குறிக்கும்.

    கெதியாய் என்பது விரசாய், விரைவாக, பேசு என்பது பேச்சு, ஏச்சு என

    தொடருங்கள்

    குழப்படி என்பதற்கு வால் என்பது எப்படி? குழப்படி என்பது confusion?

    பதிலளிநீக்கு
  5. //இவை என்னால் அவதானிக்கப் பட்ட சொற்கள் மட்டுமேயன்றி ஆய்வல்ல. //

    தெரியுது தெரியுது...

    வித்யாசமான முயற்சி.

    பதிலளிநீக்கு
  6. கெதியாய், ஓம், போன்றாவை தவிர வேறு மாறுபாடு இல்லை... நீங்கள் இந்தப் பக்கம் மாற்றிக் கொடுத்திருந்தாலும்..! கதைக்க என்பீர்கள், இங்கு 'பேசு'வோம். ஆனால் நீங்கள் கோப்பி என்றுதானே சொல்வீர்கள். இங்குதான் காபி என்று சொல்வோம். மீன் பெயர்கள் மாற்றம் தெரியாது. நான் சைவம்! அடுஅத்தடுத்த பதிவுகள் வரட்டும்...இன்னும் என்னென்ன மாற்றம் என்று பார்ப்போம்!

    பதிலளிநீக்கு
  7. //

    D.R.Ashok கூறியது...
    சுகமா இருக்கிறீங்களா?

    (சுக)மா.. இருக்கீ..ங்களா...

    இப்படிதான் pronounce panranga..

    maybe srilankan slangs distrubs their language or malayalam

    என்னால் சிறிலங்கன் தமிழர்களிடம் உரையாடும்போது.. சரியாக புரிந்துக்கொள்ள முடியவில்லை.

    November 9, 2009 11:07 PM

    //


    சரியா சொன்னீர்கள்
    நாம் சிலருடன் உடையாடும் பொது நீங்கள் மலையாளமா என்றும் கேட்கிறார்கள்.
    நாங்கள் பல தமிழ்த் திரைப்படம் பார்த்தவர்கள் அதனால் எமக்கு புரிதலில் பெரியளவு சிக்கல் இல்லை.


    நன்றி D.R.Ashok

    பதிலளிநீக்கு
  8. //
    இன்றைய கவிதை கூறியது...
    நான் தான் ·பர்ஸ்ட்!

    -கேயார்

    November 9, 2009 11:07 PM
    //

    நன்றி இன்றைய கவிதை.
    அதற்குள் முந்திவிட்டரே D.R.Ashok

    பதிலளிநீக்கு
  9. ///

    லெமூரியன் கூறியது...
    நீங்கள் இலங்கைத் தமிழ் சொற்கள் என்று குறிப்பிட்டுள்ள அனைத்து சொற்களும் தென் தமிழகத்தில்(குறிப்பாக நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்கள் ) இன்று பழக்கத்தில் உள்ள வார்த்தைகள்....தென்னகத்து தமிழ்க்கும் தமிழகத்தின் பிற பகுதிகளிற்கும் பேச்சுத் தமிழ் நிறைய மாறுபடும்...!

    November 9, 2009 11:29 PM

    //

    லெமூரியன் கூறியது...
    திறப்பு - திறவுகோல் மருவி தொரவால் என்று தென் தமிழகத்தில் சொல்வார்கள்.

    November 9, 2009 11:32 PM
    ///

    அப்படியா நன்றி லெமூரியன்

    (நானும் அறிந்தேன் திருநெல்வேலித் தமிழில் இலங்கையின் சாயல் உள்ளதாக )

    பதிலளிநீக்கு
  10. ///

    வானம்பாடிகள் கூறியது...
    பல வட்டார வழக்குகளில் இலங்கைத் தமிழ் அப்படியே அல்லது சிறிது மாற்றங்களுடன் புழங்கப் படுகிறது

    மதுரை, திருநெல்வேலி வட்டாரத்தில் பிள்ளை என்பது பெண்பிள்ளையைக் குறிக்கும்.

    கெதியாய் என்பது விரசாய், விரைவாக, பேசு என்பது பேச்சு, ஏச்சு என

    தொடருங்கள்

    குழப்படி என்பதற்கு வால் என்பது எப்படி? குழப்படி என்பது confusion?

    November 9, 2009 11:36 PM

    ///

    உங்கள் பின்னூட்டங்களில் இவ்வாறான தரவுகளைத் தருவது எனக்கு இன்னும் ஊக்கமளிக்கிறது நன்றி வானம்பாடிகள்

    பதிலளிநீக்கு
  11. //

    சுசி கூறியது...
    //இவை என்னால் அவதானிக்கப் பட்ட சொற்கள் மட்டுமேயன்றி ஆய்வல்ல. //

    தெரியுது தெரியுது...

    வித்யாசமான முயற்சி.

    November 10, 2009 1:07 AM

    //

    நன்றி சுசி

    பதிலளிநீக்கு
  12. //

    ஸ்ரீராம். கூறியது...

    கெதியாய், ஓம், போன்றாவை தவிர வேறு மாறுபாடு இல்லை... நீங்கள் இந்தப் பக்கம் மாற்றிக் கொடுத்திருந்தாலும்..! கதைக்க என்பீர்கள், இங்கு 'பேசு'வோம். ஆனால் நீங்கள் கோப்பி என்றுதானே சொல்வீர்கள். இங்குதான் காபி என்று சொல்வோம். மீன் பெயர்கள் மாற்றம் தெரியாது. நான் சைவம்! அடுஅத்தடுத்த பதிவுகள் வரட்டும்...இன்னும் என்னென்ன மாற்றம் என்று பார்ப்போம்!

    November 10, 2009 6:37 AM
    //

    ஸ்ரீராம் நன்றி.


    "ஆனால் நீங்கள் கோப்பி என்றுதானே சொல்வீர்கள். இங்குதான் காபி என்று சொல்வோம்."

    ஆமாம் இது சரி .

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....

அன்புடன்
-தியா-

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.2. ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

2.2. ஆரியச்சக்கரவர்த்திகள் கால இலக்கியங்களின் சிறப்பியல்புகள் (பண்புகள்)