மெல்லத் தமிழ் இனிச் சாகுமா?




உலக மொழிகளின் தாய் மொழியும்
திராவிட நாகரிகத்தின் தொட்டிலில்
ஆட்டி வளர்க்கப்பட்ட குழந்தையுமாகிய
அமிழ்தினும் இனிய மொழியாம்
தமிழ் மொழி இறந்து விட்டாள் என்பதை……

இப்படியொரு அறிவித்தலை எதிர்பார்த்தபடி நாம் நகர்ந்து கொண்டிருக்கிறோமா என்ற வினாவுடனும் நிகழாது தடுக்கப் பாடுபடவேண்டும் என்ற அவாவுடனும் இதனை எழுதத் தொடங்குகிறேன்.

தமிழ் மொழி

* நம் தாய்மொழி தமிழாகும்.

* உலகின் பன்மொழி ஆய்வாளர்களினால் முதலில் தோன்றியமொழி என்ற சிறப்புப் பெற்ற மொழி.

* அமிழ்தினும் இனியதெனப் புகழப்படுகின்ற மொழி.

* 9 கோடி தமிழர்களின் தனித்துவமான மொழி.

* “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்” எனப் பாரதியாரால் போற்றப்பட்ட மொழி.
* கல்வெட்டிலிருந்து கணிணி வரை பரந்த மொழி.

தமிழ் மொழி இதுவரை இழந்தவை

அகத்தியம்
பெருநாரை
பெருங்குருகு
முதுநாரை
முதுகுருகு
பஞ்சமரபு
பஞ்சபாரதீயம்
பதினாறு படலம்
வாய்ப்பியம்
இந்திரகாளியம்
குலோத்துங்கன் இசைநூல்
முதலிய எண்ணற்ற அரிய நூல்களும் கல்வெட்டு முதலிய எண்ணற்ற ஆதாரங்களும்

தமிழ் வாழும் இடங்கள்

தமிழ்நாடு
இலங்கை
சிங்கப்பூர்
மலேசியா
பர்மா
மொரீசியஸ்
தென்னாபிரிக்கா
கயானா
பிஜி
சுரீனாம்
ட்ரிடாட்
டொபாகோ

போன்ற நாடுகளில் பூர்வீகத் தமிழர் உள்ளனர். ஆனால் எல்லா நாட்டிலும் தமிழ் பேசப்படவில்லை.

ஐரோப்பிய நாடுகள்
கனடா
அமெரிக்கா
அவுஸ்ரேலியா

போன்ற நாடுகளில் இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து சென்ற தமிழர்கள் அதிகம் வாழ்கின்றனர். இவர்கள் தாம் வாழும் நாடுகளில் தமிழை வளர்க்க ஓரளவு முயற்சி எடுத்து வருகின்ற போதிலும் இளந்தலைமுறையினரான இரண்டாம் சந்ததியினர் தாய்மொழியில் நாட்டமின்றி இருக்கின்றமை வருந்தத் தக்கது.

தமிழுக்குரிய இடம்

* 1996 ஆம் ஆண்டின் புள்ளிவிவரப்படி உலகம் முழுவதிலும் 7 கோடியே 40 இலட்சம் (74 மில்லியன்) மக்கள் பேசும் மொழியாகத் தமிழ் இருந்தது. அப்பட்டியலின்படி தமிழுக்கு உலக மொழிகளில் 20 வது இடம் வழங்கப்பட்டிருந்தது.

* இந்தியாவின் அரசியலமைப்பின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளுள் தமிழும் ஒன்று.

* தமிழ் நாட்டின் ஆட்சிமொழி.

* இலங்கையிலும் மூன்று ஆட்சி மொழிகளுள் தமிழும் ஒன்று.

* சிங்கப்பூரின் தேசிய மொழிகளுள் ஒன்று.

* தென்னாபிரிக்காவில் தமிழுக்கு அரசியல் அமைப்பு ரீதியான அங்கீகாரம் உள்ளது.

* இந்தியாவில் செம்மொழி அங்கீகாரம் பெற்ற ஒரேயொரு மொழி தமிழ் மட்டுமே. (இந்திய நாடாளுமன்றத்தில் வைத்து 2004 – 06 – 06 அன்று அப்போதைய குடியரசுத் தலைவர் டாக்டர். அப்துல்கலாம் இவ் அறிவிப்பினை வெளியிட்டார்.)

தமிழ் வழக்குமொழி

Ethnologue” என்ற உலக மொழிகள் பற்றிய பதிப்பு நிறுவனம் தமிழில் 22 வட்டார வழக்குகள் உள்ளதெனக் கூறுகின்றது.

ஆதிதிராவிடர்
ஐயர்
ஐயங்கார்
அரவா
பருகண்டி
கசுவா
கொங்கர்
கொரவா
கொர்சி
மதராஸி
பரிகலா
பாட்டுபாஷை
இலங்கைத் தமிழ்
மலேயா தமிழ்
பர்மா தமிழ்
தென்னாபிரிக்கத் தமிழ்
திகாலு
அரிஜன்
சங்கேதி
கெப்பார்
மதுரை
திருநெல்வேலி

முதலியனவே அவையாகும். ஆனால் ஆராய்ந்து பார்க்குமிடத்து 100க்கு மேற்பட்ட வட்டார மொழிகள் தமிழில் நிலைத்து விட்டமையே உண்மையாகும்.

அழிவை எதிர்நோக்கியபடி தமிழ்மொழி

* பிறமொழி ஊடுருவல் அதிகரித்தமை

* வட்டார வழக்குகள் தனிமொழியாகக் கிளர்வது

* தொடர்ச்சியாக இரண்டு தலைமுறையினர் தமிழைக் கற்க ஆர்வமற்றவர்களாக எதிர்காலத்தில் இருந்தல்

* தமிழ் நாட்டில் பலர் ஆங்கிலத்தில் பேசுவதையே கௌரவம் என எண்ணுதல்

* புலம்பெயர் தமிழர்களிடையே குறிப்பாக இரண்டாம் தலைமுறையினரிடையே தமிழ் பேச்சு மொழி அந்தஸ்தைக் கூட இழந்தமை

* போன்ற பல காரணங்களினால் தமிழ் அழிவை நோக்கி நகரத் தொடங்கிவிட்டதோ என்ற ஐயம் எழுகிறது.

இழிவு நிலை

* தாய்மொழியில் பேசினால் கைதட்டும் கூட்டமாகத் தமிழர் இருப்பது.

* தமிழில் பேசுவதை இழிவெனக் கருதுவது

* “எனக்கு அவ்வளவாகத் தமிழ் வராது” எனக் கூச்சமின்றிச் சபையில் கூறுவதும் அதைப் பெருமையென எண்ணுவதும்.

* இவ்வாறு இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.

நாம் செய்யவேண்டியது என்ன?

* தமிழைத் தமிழாகப் பேச வேண்டும்.

* அறிவியல் மொழியாகத் தமிழை உயர்த்த வழி செய்ய வேண்டும்

* ரைசியன் போல் யப்பான்காரன் போல் சீனக்காரன் போல் சொந்த மொழியில் எதையும் செய்யலாம் என்ற நம்பிக்கை தமிழனுக்கும் பிறக்க வேண்டும்.

* முக்கியமாகத் “தமிழரைக் கண்டாலாவது தமிழில் பேசவேண்டும்”

தமிழின் அழிவு நிச்சயிக்கப்பட்டு விட்டதா?

சில ஆண்டுகளுக்கு முன்னர் ஐ.நா சபையின் அறிக்கையொன்றில் இன்னும் 30 ஆண்டுகளில் அழியப்போகின்ற உலக மொழிகளில் தமிழும் ஒன்றாக உள்ளடக்கப்பட்டிருந்தது. இது சாத்தியமாவதும் அசாத்தியமாவதும் இனமானமுள்ள ஒவ்வொரு தமிழரின் கையிலும் நாவிலும்தான் உள்ளது.


கருத்துகள்

  1. பிரமித்துப் போனேன் தியா. என்ன உழைப்பு. எவ்வளவு தகவல். அருமை. நன்றி.

    பதிலளிநீக்கு
  2. மிகப்பெரும் பொக்கிஷம்போன்ற தமிழ் பற்றிய அறியாததும் அறியக் கிடைத்த படைப்பு தியா ...

    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  3. உங்கள் முயற்சிக்கும் ஆர்வத்துக்கும் என் பாராடுக்கள் ....உங்களை போன்றவர்கள் இருக்கும் வரை தமிழ் அழியாது . இப்போதுள்ள் கவலை தமிழுக்குள் ஆங்கிலம் புகுத்த பட்டு அதுவே பேச்சு வழக்காக மாறுகிறது. உங்கள் ஆர்வம் மென் மேலும் வளர்க. மேலும் தேடி தருக.

    பதிலளிநீக்கு
  4. அருமை சகோதரா...

    தங்களின் உழைப்பு தெரிகிறது...

    பதிலளிநீக்கு
  5. அன்பு தியா அவர்களுக்கு,

    தங்களுடைய ஆதங்கம் கண்டோம். மிக நியாயமானது.

    இதனால்தான் நாங்கள் சிறு பங்களிப்பைத் துவங்கியிருக்கிறோம்.
    முடிந்தால் தமிழ்த்துளிக்கு வாருங்கள்; தங்களுக்குத் தெரிந்ததையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
    http://tulitamil.blogspot.com/

    'தமிழ் வாழ' இப்படியும் செய்யலாம் என்பது எங்களுடைய தாழ்மையான கருத்து.

    என்றும் அன்புடன்,
    இன்றைய கவிதை அன்பர்கள்

    பதிலளிநீக்கு
  6. எவ்வளவு உழைப்பு அருமை அருமை அருமை!!!!

    biramiiththup pooneen !!

    பதிலளிநீக்கு
  7. //
    வானம்பாடிகள் கூறியது...
    பிரமித்துப் போனேன் தியா. என்ன உழைப்பு. எவ்வளவு தகவல். அருமை. நன்றி.

    December 1, 2009 8:36 பம்


    //



    நன்றி வானம்பாடிகள் உங்களின் வாழ்த்துக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  8. thenammailakshmanan கூறியது...
    மிகப்பெரும் பொக்கிஷம்போன்ற தமிழ் பற்றிய அறியாததும் அறியக் கிடைத்த படைப்பு தியா ...

    வாழ்த்துக்கள்...

    December 1, 2009 8:53 பம்


    //



    நன்றி
    thenammailakshmanan உங்களின் வாழ்த்துக்கும் நன்றி

    பதிலளிநீக்கு
  9. நிலாமதி கூறியது...
    உங்கள் முயற்சிக்கும் ஆர்வத்துக்கும் என் பாராடுக்கள் ....உங்களை போன்றவர்கள் இருக்கும் வரை தமிழ் அழியாது . இப்போதுள்ள் கவலை தமிழுக்குள் ஆங்கிலம் புகுத்த பட்டு அதுவே பேச்சு வழக்காக மாறுகிறது. உங்கள் ஆர்வம் மென் மேலும் வளர்க. மேலும் தேடி தருக.

    December 1, 2009 9:05 பம்
    //

    நன்றி அக்கா உங்களை பாராட்டுதலுக்கும் அன்புக்கும் ஆதங்கத்துடன் கூடிய பின்னூட்டத்துக்கும் நன்றி

    பதிலளிநீக்கு
  10. பிரியமுடன்...வசந்த் கூறியது...
    அருமை சகோதரா...

    தங்களின் உழைப்பு தெரிகிறது...

    December 1, 2009 9:20 பம்


    //

    நன்றி வசந்த்

    பதிலளிநீக்கு
  11. இன்றைய கவிதை கூறியது...
    அன்பு தியா அவர்களுக்கு,

    தங்களுடைய ஆதங்கம் கண்டோம். மிக நியாயமானது.

    இதனால்தான் நாங்கள் சிறு பங்களிப்பைத் துவங்கியிருக்கிறோம்.
    முடிந்தால் தமிழ்த்துளிக்கு வாருங்கள்; தங்களுக்குத் தெரிந்ததையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
    http://tulitamil.blogspot.com/

    'தமிழ் வாழ' இப்படியும் செய்யலாம் என்பது எங்களுடைய தாழ்மையான கருத்து.

    என்றும் அன்புடன்,
    இன்றைய கவிதை அன்பர்கள்

    December 1, 2009 9:56 பம்


    //

    நன்றி இன்றைய கவிதை அன்பர்கள்

    உங்களின் அழைப்பினை ஏற்கிறேன்.

    பதிலளிநீக்கு
  12. நேசமித்ரன் கூறியது...
    எவ்வளவு உழைப்பு அருமை அருமை அருமை!!!!

    biramiiththup pooneen !!

    December 1, 2009 10:26 பம்


    //



    நன்றி நேசமித்திரன்

    பதிலளிநீக்கு
  13. பிரமாதம்....

    உங்களைப் போன்றவர்களின் உழைப்பு இருக்கும் வரை தமிழுக்கு ஏது அழிவு தியா...

    பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  14. சுசி கூறியது...
    பிரமாதம்....

    உங்களைப் போன்றவர்களின் உழைப்பு இருக்கும் வரை தமிழுக்கு ஏது அழிவு தியா...

    பாராட்டுக்கள்.

    December 2, 2009 1:34 எ


    //

    உங்களின் பாராடுக்கு நன்றி சுசி

    பதிலளிநீக்கு
  15. தோழமையே இங்கு வந்து விருதினைப்பெற்றுக்கொள்ளவும்.

    http://kalaisaral.blogspot.com/2009/12/blog-post.html

    பதிலளிநீக்கு
  16. தமிழை யாராலும் அழிக்க முடியாது தியா...இது பற்றி நானும் எழுதிருக்கேன்.

    தமிழ் அழியாது

    பதிலளிநீக்கு
  17. http://pulavanpulikesi.blogspot.com/search/label/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D

    பதிலளிநீக்கு
  18. //"இந்தியாவில் செம்மொழி அங்கீகாரம் பெற்ற ஒரேயொரு மொழி தமிழ் மட்டுமே. (இந்திய நாடாளுமன்றத்தில் வைத்து 2004 – 06 – 06 அன்று அப்போதைய குடியரசுத் தலைவர் டாக்டர். அப்துல்கலாம் இவ் அறிவிப்பினை வெளியிட்டார்.)"//

    இந்தியாவில் செம்மொழி அந்தஸ்த்துக்கு தெலுங்கு, சமஸ்க்ரிதமும் பின்னர் அறிவிக்கப் பட்டன.2008 ஆம் ஆண்டு அறிவிக்கப் பட்டது.

    பதிலளிநீக்கு
  19. ஆதங்கம் நியாயமானது,
    உங்கள் முயற்சிக்கு நன்றி தியா.
    நிலைக்கும் தரமும் சூழலும் உள்ளவரை எதுவும் நிலைக்கும்.
    அதில் ஓன்று குறைந்தாலும் யாரும் எதையும் காப்பாற்ற முடியாது.

    பதிலளிநீக்கு
  20. அன்புடன் மலிக்கா கூறியது...
    தோழமையே இங்கு வந்து விருதினைப்பெற்றுக்கொள்ளவும்.

    http://kalaisaral.blogspot.com/2009/12/blog-post.html

    December 2, 2009 9:38 அம


    //



    நன்றி மலிக்கா

    உங்களின் விருது என்னை ஊக்கப்படுத்துகிறது

    பதிலளிநீக்கு
  21. புலவன் புலிகேசி கூறியது...
    தமிழை யாராலும் அழிக்க முடியாது தியா...இது பற்றி நானும் எழுதிருக்கேன்.

    தமிழ் அழியாது

    December 2, 2009 10:54 AM


    புலவன் புலிகேசி கூறியது...
    http://pulavanpulikesi.blogspot.com/search/label/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D

    December 2, 2009 10:55 அம


    //

    நன்றி புலவன் புலிகேசி

    பதிலளிநீக்கு
  22. ஸ்ரீராம். கூறியது...
    //"இந்தியாவில் செம்மொழி அங்கீகாரம் பெற்ற ஒரேயொரு மொழி தமிழ் மட்டுமே. (இந்திய நாடாளுமன்றத்தில் வைத்து 2004 – 06 – 06 அன்று அப்போதைய குடியரசுத் தலைவர் டாக்டர். அப்துல்கலாம் இவ் அறிவிப்பினை வெளியிட்டார்.)"//

    இந்தியாவில் செம்மொழி அந்தஸ்த்துக்கு தெலுங்கு, சமஸ்க்ரிதமும் பின்னர் அறிவிக்கப் பட்டன.2008 ஆம் ஆண்டு அறிவிக்கப் பட்டது.

    December 2, 2009 1:31 பம்


    //



    நன்றி ஸ்ரீராம்

    உங்கள் தகவலுக்கு நன்றி

    அதனையும் இங்கு இணைத்துவிடுகிறேன்

    பதிலளிநீக்கு
  23. வி.என்.தங்கமணி, கூறியது...
    ஆதங்கம் நியாயமானது,
    உங்கள் முயற்சிக்கு நன்றி தியா.
    நிலைக்கும் தரமும் சூழலும் உள்ளவரை எதுவும் நிலைக்கும்.
    அதில் ஓன்று குறைந்தாலும் யாரும் எதையும் காப்பாற்ற முடியாது.

    December 2, 2009 3:02 PM

    //
    உங்களின் பின்னூட்டத்துக்கு நன்றி வி.என்.தங்கமணி

    பதிலளிநீக்கு
  24. தமிழை பற்றிய மிக சிறந்த கட்டுரையும்,அதில் உங்கள் ஆதங்கமும் புரிகிறது நண்பரே.

    வரும் தலைமுறை தமிழை மறக்காது என்றே நம்புவோம்; நல்ல பதிவு.

    பதிலளிநீக்கு
  25. தற்செயலாய்....உங்கள் முற்றத்தை
    எட்டிப் பார்த்தேன்!
    துள்ளி விளையாடுகின்றாள்”தமிழ்’
    குழந்தை.துள்ளி வந்து அணைத்துக்
    கொண்டேன்.தினம் வருவேன்
    முத்தமிட......

    தமிழைப் பற்றி மிக அருமையாய்,
    அழகாய் விளக்கம் கொடுத்திருக்கின்றீர்கள்
    மிக்க நன்றி
    மெல்லத் தமிழ் இனிச் சாகுமா?
    இதற்கு_வெல்லத் தமிழ் இனிச் சாகுமா!!
    அனைவர் நாவிலும் இனிப்பாய்
    சுவை கொடுத்துக் கொண்டுதான் இருக்கின்றன.
    இதை மறுக்க முடியாது.
    வெகுசிலர்மட்டுந்தான்.சூழ்நிலைகாரணமாய்.அல்லது
    வெட்கப்பட்டு{சரியாக உச்சரிக்கின்றோமா} எனக்
    கூச்சப்பட்டு ஒரு தடுமாற்றம்தான்.விருப்பமின்மையில்லை.
    எந்த நாட்டுக்கோ,இடத்துக்கோ போனால் தமிழன்
    என்ற உணர்வு,பற்று,ஆவேசம்,இனம் என்றொரு
    எழுச்சி உண்டாகிறது{இங்கு தமிழ் சாகவில்லை!
    எழுகிறது.}அதுவும் அதிகம் நம் இளையர்களிடமிருந்து!
    தமிழ் ஊற்றுத்தான்!! குளமில்லை வற்றுவதற்கு!
    தாகம் ஏற்ப்பட்டால் நிட்சயமாகப் பருகுவார்கள்.
    நன்றி




    {வலைத்தளங்களின் அதிகம் இளையவர்கள்தான்!}
    இதே ஓர் எடுத்துக் காட்டு.

    பதிலளிநீக்கு
  26. //
    Kala கூறியது...
    தற்செயலாய்....உங்கள் முற்றத்தை
    எட்டிப் பார்த்தேன்!
    துள்ளி விளையாடுகின்றாள்”தமிழ்’
    குழந்தை.துள்ளி வந்து அணைத்துக்
    கொண்டேன்.தினம் வருவேன்
    முத்தமிட......

    தமிழைப் பற்றி மிக அருமையாய்,
    அழகாய் விளக்கம் கொடுத்திருக்கின்றீர்கள்
    மிக்க நன்றி
    மெல்லத் தமிழ் இனிச் சாகுமா?
    இதற்கு_வெல்லத் தமிழ் இனிச் சாகுமா!!
    அனைவர் நாவிலும் இனிப்பாய்
    சுவை கொடுத்துக் கொண்டுதான் இருக்கின்றன.
    இதை மறுக்க முடியாது.
    வெகுசிலர்மட்டுந்தான்.சூழ்நிலைகாரணமாய்.அல்லது
    வெட்கப்பட்டு{சரியாக உச்சரிக்கின்றோமா} எனக்
    கூச்சப்பட்டு ஒரு தடுமாற்றம்தான்.விருப்பமின்மையில்லை.
    எந்த நாட்டுக்கோ,இடத்துக்கோ போனால் தமிழன்
    என்ற உணர்வு,பற்று,ஆவேசம்,இனம் என்றொரு
    எழுச்சி உண்டாகிறது{இங்கு தமிழ் சாகவில்லை!
    எழுகிறது.}அதுவும் அதிகம் நம் இளையர்களிடமிருந்து!
    தமிழ் ஊற்றுத்தான்!! குளமில்லை வற்றுவதற்கு!
    தாகம் ஏற்ப்பட்டால் நிட்சயமாகப் பருகுவார்கள்.
    நன்றி




    {வலைத்தளங்களின் அதிகம் இளையவர்கள்தான்!}
    இதே ஓர் எடுத்துக் காட்டு.

    December 2, 2009 7:35 பம்


    //

    நன்றி கலா உங்களின் கருத்து வரவேற்கத்தக்கது.

    நிறைய நல்ல விஷயம் சொல்லியுள்ளீர்கள்.



    உங்களின் தளத்தினை அணுக முடியவில்லை ஏன்?

    பதிலளிநீக்கு
  27. தேடலுக்கு இங்கிருந்து தலை வணங்குகிறேன் தியா.மனதில் அவ்வளவு சந்தோஷம்.
    உங்களைப்போல பலர் இன்னும் வேணும்.

    பதிலளிநீக்கு
  28. //
    ஹேமா கூறியது...
    தேடலுக்கு இங்கிருந்து தலை வணங்குகிறேன் தியா.மனதில் அவ்வளவு சந்தோஷம்.
    உங்களைப்போல பலர் இன்னும் வேணும்.

    December 3, 2009 2:31 AM
    //

    நன்றி ஹேமா

    பதிலளிநீக்கு
  29. கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றிய தமிழ் சுலபத்தில் சாகாது, கவலை வேண்டாம்.
    நாம் செய்ய வேண்டியது சொன்னீர்கள், அரசு செய்ய வேண்டியது இருக்கிறது, தமிழில் மட்டுமே படித்து முடித்த இளைஞர்களுக்கு தமிழ்நாட்டிலேயே வேலை கிடைக்க (சாதி சமய வேற்றுமை பாராட்டாமல்) ஏற்பாடு செய்ய வேண்டும்.
    வயிற்றுக்கு சோறு போடாத மொழி வாழ்ந்து என்ன பயன்?

    பதிலளிநீக்கு
  30. அடேங்கப்பா....தமிழைப்பற்றி இவ்வளவு தகவல்களா...? மிக பிரமிப்பாக இருக்கிறது உங்கள் ஆர்வமும் தமிழும்...

    அருமையா சொல்லிருக்கீங்க. வாழ்த்துகள். :-)

    பதிலளிநீக்கு
  31. பெயர் சொல்ல விருப்பமில்லை கூறியது...
    கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றிய தமிழ் சுலபத்தில் சாகாது, கவலை வேண்டாம்.
    நாம் செய்ய வேண்டியது சொன்னீர்கள், அரசு செய்ய வேண்டியது இருக்கிறது, தமிழில் மட்டுமே படித்து முடித்த இளைஞர்களுக்கு தமிழ்நாட்டிலேயே வேலை கிடைக்க (சாதி சமய வேற்றுமை பாராட்டாமல்) ஏற்பாடு செய்ய வேண்டும்.
    வயிற்றுக்கு சோறு போடாத மொழி வாழ்ந்து என்ன பயன்?

    December 4, 2009 10:25 அம


    //



    உண்மைதான் என்ன செய்வது தமிழுக்காக வாழ்கிறோம் என்று சொல்வோர் இதைப் பற்றிச் சிந்திப்பாதாக இல்லை

    பதிலளிநீக்கு
  32. ரோஸ்விக் கூறியது...
    அடேங்கப்பா....தமிழைப்பற்றி இவ்வளவு தகவல்களா...? மிக பிரமிப்பாக இருக்கிறது உங்கள் ஆர்வமும் தமிழும்...

    அருமையா சொல்லிருக்கீங்க. வாழ்த்துகள். :-)

    December 4, 2009 3:32 ப


    //

    நன்றி ரோஸ்விக்

    பதிலளிநீக்கு
  33. நல்ல விசயம்.

    வட்டாரத் தமிழ் பேசுபவர்களை விட்டு விடலாம். அதை மாற்றுவது அவ்வளவு எளிதும் அல்ல. ஆனால் எழுதும்போது, எல்லோருமே தூய தமிழில் எழுதுவதைப் பழக்கமாகக் கொண்டால், தமிழின் தூய்மை கெடாது பேணப்படும்.
    இதனால் தான் நான் வட்டாரத் தமிழிலோ, ஊர்ப் பாசையிலோ எழுதும் ஆக்கங்களை அவ்வளவு ரசிப்பதில்லை.
    எழுதும் போது தூய்மையைக் கடைப் பிடித்தால் தமிழின் தனித் தன்மை பேணப்படும், தமிழும் “ஒரு” மொழியாக வாழும்.

    பதிலளிநீக்கு
  34. செயபால் கூறியது...
    நல்ல விசயம்.

    வட்டாரத் தமிழ் பேசுபவர்களை விட்டு விடலாம். அதை மாற்றுவது அவ்வளவு எளிதும் அல்ல. ஆனால் எழுதும்போது, எல்லோருமே தூய தமிழில் எழுதுவதைப் பழக்கமாகக் கொண்டால், தமிழின் தூய்மை கெடாது பேணப்படும்.
    இதனால் தான் நான் வட்டாரத் தமிழிலோ, ஊர்ப் பாசையிலோ எழுதும் ஆக்கங்களை அவ்வளவு ரசிப்பதில்லை.
    எழுதும் போது தூய்மையைக் கடைப் பிடித்தால் தமிழின் தனித் தன்மை பேணப்படும், தமிழும் “ஒரு” மொழியாக வாழும்.

    December 4, 2009 7:21 பம்


    //

    நன்றி செயபால் தொடர்ந்தது உங்கள் கருத்துக்களைத் தாருங்கள்

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....

அன்புடன்
-தியா-

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.2. ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

2.2. ஆரியச்சக்கரவர்த்திகள் கால இலக்கியங்களின் சிறப்பியல்புகள் (பண்புகள்)