நானும் என்சிறு பெண்ணும் அச்சந்தரும் இரவுகளும்
இந்தக் கவிதையை, உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு நடாத்தும் கவிதைப் போட்டிக்கு அனுப்பியுள்ளேன்.
ஆராரோ ஆரிவரோ
ஆரடிச்சு நீயழுதாய்
அடித்தாரை சொல்லியளு
ஆய்கினைகள் பண்ணி வைப்பேன்
காத்து நுழையாத வீட்டினுள்ளே
காவாலி அவன் நுழைந்தான்
பாத்துப்பாத்து கட்டி வைச்ச
செல்வமெல்லாம் கொண்டுபோனான்
முகமூடி கொண்டொருவன்
படியேறி வருவானென்று
அடிபாவி நான் நினைக்க
ஆதாரம் ஏதுமுண்டோ
கடிகாவல் செய்து வைக்க
காவலர்கள் யாருமில்லை
கடிநாயும் வளர்க்கவில்லை
காவலுக்கு வைக்கவில்லை
அந்தாளும் சிவனேன்னு
ஆகாயம் போயிட்டார்
இந்த உலகமதில் எங்களுக்கு
வேறு துணை யாருமில்லை
சிறுக்கி செம சிறுக்கி
சின்னமகள் இவளிருக்க
பொறுக்கி எடுத்த முத்து
வேறெதற்கு உலகினிலே
பொன்னனான பொன்மணியை
பொத்திப் பொத்தி வளர்க்கையிலே
கண்ணான கண்மணிகள்
கருவிழியும் மங்குதடி
கருவிழிகள் மங்கி மங்கி
காவல் செய்யும் வேளையிலே
இரவுதனில் எவன் வருவான்
எதையெடுப்பான் என்று பயம்
இரவு வரும் வேளையிலே
காடையர்கள் வீடு வந்தால்
இரவி வரும் வேளைக்குமுன்
பாடையெல்லோ கட்டிடுவார்
பொழுதேறிப் போகையிலே
வருவதுவோ நித துக்கம்
அழுதழுது கண்கள் மங்கும்
அனுதினமும் முகஞ்சினுங்கும்
கள்ளன் வந்தான் என்ற சேதி
வெள்ளம் போல பரவமுன்னர்
உள்ளங் கொள்ளை போனதென்று
ஊர் முழுக்க கதையுரைப்பார்
பருத்தி இலை போல நெஞ்சு
படபடக்கச் செய்யுதடி
நெருடி நெருடி நெஞ்சம்
பயத்தில் திணறுதடி
சிறு பெண்ணும் நானுமிங்கே
உறு மீனாய் தவிக்கையிலே
சிலவேளை வருநாளில்
வயசுக்கு வந்து விட்டால்
காப்பாற்ற நாதியற்று
கலங்கியெல்லோ போயிடுவேன்
பாப்பாரும் யாருமில்லை
பாவிநான் தவிக்கையிலே
கண்ணான கண்மணியே
காலந் தாழ்த்தி வயசுக்கு வா
மண் மீட்கும் காலம் வந்தால்
மகிழ்வுடன் நீ வளர்ந்திடம்மா…
ஆராரோ ஆரிவரோ
ஆரடிச்சு நீயழுதாய்
அடித்தாரை சொல்லியளு
ஆய்கினைகள் பண்ணி வைப்பேன்…
ஆரடிச்சு நீயழுதாய்
அடித்தாரை சொல்லியளு
ஆய்கினைகள் பண்ணி வைப்பேன்
காத்து நுழையாத வீட்டினுள்ளே
காவாலி அவன் நுழைந்தான்
பாத்துப்பாத்து கட்டி வைச்ச
செல்வமெல்லாம் கொண்டுபோனான்
முகமூடி கொண்டொருவன்
படியேறி வருவானென்று
அடிபாவி நான் நினைக்க
ஆதாரம் ஏதுமுண்டோ
கடிகாவல் செய்து வைக்க
காவலர்கள் யாருமில்லை
கடிநாயும் வளர்க்கவில்லை
காவலுக்கு வைக்கவில்லை
அந்தாளும் சிவனேன்னு
ஆகாயம் போயிட்டார்
இந்த உலகமதில் எங்களுக்கு
வேறு துணை யாருமில்லை
சிறுக்கி செம சிறுக்கி
சின்னமகள் இவளிருக்க
பொறுக்கி எடுத்த முத்து
வேறெதற்கு உலகினிலே
பொன்னனான பொன்மணியை
பொத்திப் பொத்தி வளர்க்கையிலே
கண்ணான கண்மணிகள்
கருவிழியும் மங்குதடி
கருவிழிகள் மங்கி மங்கி
காவல் செய்யும் வேளையிலே
இரவுதனில் எவன் வருவான்
எதையெடுப்பான் என்று பயம்
இரவு வரும் வேளையிலே
காடையர்கள் வீடு வந்தால்
இரவி வரும் வேளைக்குமுன்
பாடையெல்லோ கட்டிடுவார்
பொழுதேறிப் போகையிலே
வருவதுவோ நித துக்கம்
அழுதழுது கண்கள் மங்கும்
அனுதினமும் முகஞ்சினுங்கும்
கள்ளன் வந்தான் என்ற சேதி
வெள்ளம் போல பரவமுன்னர்
உள்ளங் கொள்ளை போனதென்று
ஊர் முழுக்க கதையுரைப்பார்
பருத்தி இலை போல நெஞ்சு
படபடக்கச் செய்யுதடி
நெருடி நெருடி நெஞ்சம்
பயத்தில் திணறுதடி
சிறு பெண்ணும் நானுமிங்கே
உறு மீனாய் தவிக்கையிலே
சிலவேளை வருநாளில்
வயசுக்கு வந்து விட்டால்
காப்பாற்ற நாதியற்று
கலங்கியெல்லோ போயிடுவேன்
பாப்பாரும் யாருமில்லை
பாவிநான் தவிக்கையிலே
கண்ணான கண்மணியே
காலந் தாழ்த்தி வயசுக்கு வா
மண் மீட்கும் காலம் வந்தால்
மகிழ்வுடன் நீ வளர்ந்திடம்மா…
ஆராரோ ஆரிவரோ
ஆரடிச்சு நீயழுதாய்
அடித்தாரை சொல்லியளு
ஆய்கினைகள் பண்ணி வைப்பேன்…
தாலாட்டும்போதே அத்தனை வலிகளையும் சொல்லித் தாலாட்டும் பாக்யம் கொண்டவர்கள் எஙகள் தாய்மார்கள்தான்.அத்தனை வரிகளிலும் இன் இனத்தில் வேதனை.
பதிலளிநீக்குஹேமா கூறியது...
பதிலளிநீக்குதாலாட்டும்போதே அத்தனை வலிகளையும் சொல்லித் தாலாட்டும் பாக்யம் கொண்டவர்கள் எஙகள் தாய்மார்கள்தான்.அத்தனை வரிகளிலும்
//
உண்மைதான் ஹேமா இலங்கைத் தமிழ்த் தாய்மார்களின் நவீன தாலாட்டு பாடல் இப்படித்தான் இருக்கிறது.
பலர் வெளிப்படையாகச் சொல்கிறார்கள் வேறுசிலர் இப்படித்தான் மனதுக்குள் புழுங்குகிறார்கள்.
மனபாரத்தை வெளிப்படுத்தும் தாலாட்டு.
பதிலளிநீக்குவாழ்த்துகள் !
பாலகுமார் கூறியது...
பதிலளிநீக்குமனபாரத்தை வெளிப்படுத்தும் தாலாட்டு.
வாழ்த்துகள் !
//
நன்றி பாலகுமார்
புதுசா வந்திருக்கிறிங்க
தொடர்ந்து வாங்க
வாழ்த்துகள் தியா
பதிலளிநீக்கு//
பதிலளிநீக்குD.R.Ashok கூறியது...
வாழ்த்துகள் தியா
15 டிசம்பர், 2009 9:53 pm
//
நன்றி D.R.Ashok
இதயம் வலிக்கும் தாலாட்டு
பதிலளிநீக்குவிஜய்
படிப்போர் தூக்கத்தை துரத்தும் தாலாட்டு...!
பதிலளிநீக்கு//இதயம் வலிக்கும் தாலாட்டு//
பதிலளிநீக்குரிப்பீட்டு
வெற்றிக்கு வாழ்த்துக்கள்
//சிறுக்கி செம சிறுக்கி
பதிலளிநீக்குசின்னமகள் இவளிருக்க
பொறுக்கி எடுத்த முத்து
வேறெதற்கு உலகினிலே
//
வரிகளில் பெருமைமிகுதியாய் தெரிகிறாள் மகள்...!
ரொம்ப நல்ல தாலாட்டு வரிகள்..!
வெற்றி பெற வாழ்த்துக்கள் நண்பா..!
கண்ணீர்ப் பூக்கும் கவிதை வரிகள். வெற்றி பெற வாழ்த்துகள் தியா.
பதிலளிநீக்குமனம் வலிக்க வலிக்க ஒரு தாலாட்டு...அருமை தியா...
பதிலளிநீக்குஇப்படியோர் தாலட்டு பாடவா....அதில் அப்படியேஎன் கதையும் கூறவா? எனும் திரைப்படபாடல்
பதிலளிநீக்குநினைவு வருகிறது. மேலும் எடுத்து வாருங்கள்.
அட அட... ! அருமை தியா...! வெற்றிபெற மனமார்ந்த வாழ்த்துகள்...!
பதிலளிநீக்குரொம்ப நெகிழ்ச்சியான கவிதை.. வெற்றிபெற வாழ்த்துக்கள் தியா..
பதிலளிநீக்கு//கள்ளன் வந்தான் என்ற சேதி
பதிலளிநீக்குவெள்ளம் போல பரவமுன்னர்
உள்ளங் கொள்ளை போனதென்று
ஊர் முழுக்க கதையுரைப்பார்//
பின்னீட்டீங்க தியா.பரிசு நிச்சயம்
arumai. Idhayam thotta Kavidhai.
பதிலளிநீக்குAndha iLam SiRumi kaalam kaniyum varai kaathirukkattum -vayadhukka vara.
கவிதை(கள்) கூறியது...
பதிலளிநீக்குஇதயம் வலிக்கும் தாலாட்டு
விஜய்
//
உங்களின் பின்னூக்கத்துக்கு நன்றி விஜய்
ஜீவன் கூறியது...
பதிலளிநீக்குபடிப்போர் தூக்கத்தை துரத்தும் தாலாட்டு...!
15 டிசம்பர், 2009 10:23 பம்
//
இது தூங்குவதர்கான தாலாட்டல்ல விளித்து எழுவதர்க்கானது.
நன்றி ஜீவன்
கண்மணி கூறியது...
பதிலளிநீக்கு//இதயம் வலிக்கும் தாலாட்டு//
ரிப்பீட்டு
வெற்றிக்கு வாழ்த்துக்கள்
//
நன்றி கண்மணி
பிரியமுடன்...வசந்த் கூறியது...
பதிலளிநீக்கு//சிறுக்கி செம சிறுக்கி
சின்னமகள் இவளிருக்க
பொறுக்கி எடுத்த முத்து
வேறெதற்கு உலகினிலே
//
வரிகளில் பெருமைமிகுதியாய் தெரிகிறாள் மகள்...!
ரொம்ப நல்ல தாலாட்டு வரிகள்..!
வெற்றி பெற வாழ்த்துக்கள் நண்பா..!
//
உண்மைதான் வசந்த்
வாழ்த்துக்கு நன்றி நண்பா
வானம்பாடிகள் கூறியது...
பதிலளிநீக்குகண்ணீர்ப் பூக்கும் கவிதை வரிகள். வெற்றி பெற வாழ்த்துகள் தியா.
//
உங்களின் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி வானம்பாடிகள்
நிலா முகிலன் கூறியது...
பதிலளிநீக்குமனம் வலிக்க வலிக்க ஒரு தாலாட்டு...அருமை தியா...
//
உங்களின் கருத்துப் பகிர்வுக்கு நன்றி நிலா முகிலன்
நிலாமதி கூறியது...
பதிலளிநீக்குஇப்படியோர் தாலட்டு பாடவா....அதில் அப்படியேஎன் கதையும் கூறவா? எனும் திரைப்படபாடல்
நினைவு வருகிறது. மேலும் எடுத்து வாருங்கள்.
//
அப்படியா!!!!
நன்றியக்கா.
கலகலப்ரியா கூறியது...
பதிலளிநீக்குஅட அட... ! அருமை தியா...! வெற்றிபெற மனமார்ந்த வாழ்த்துகள்...!
//
நன்றி கலகலப்ரியா
உங்களின் வாழ்த்துக்கு நன்றி
பலா பட்டறை கூறியது...
பதிலளிநீக்குரொம்ப நெகிழ்ச்சியான கவிதை.. வெற்றிபெற வாழ்த்துக்கள் தியா..
//
கவிதை பற்றிய உங்களின் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி பலா பட்டறை
புலவன் புலிகேசி கூறியது...
பதிலளிநீக்கு//கள்ளன் வந்தான் என்ற சேதி
வெள்ளம் போல பரவமுன்னர்
உள்ளங் கொள்ளை போனதென்று
ஊர் முழுக்க கதையுரைப்பார்//
பின்னீட்டீங்க தியா.பரிசு நிச்சயம்
//
அப்படியா? !
நன்றி புலவன் புலிகேசி
cho visiri கூறியது...
பதிலளிநீக்குarumai. Idhayam thotta Kavidhai.
Andha iLam SiRumi kaalam kaniyum varai kaathirukkattum -vayadhukka vara.
16 டிசம்பர், 2009 7:22 அம
//
உங்களின் பின்னூக்கத்துக்கு நன்றி cho visiri
வித்யாசமா நல்லா இருக்குங்க
பதிலளிநீக்குரொம்ப நல்லா இருக்குங்க. வலி தந்த போதும் அருமையான கவிதை. வெற்றி பெற வாழ்த்துகள்.
பதிலளிநீக்கு/காப்பாற்ற நாதியற்று
பதிலளிநீக்குகலங்கியெல்லோ போயிடுவேன்
பாப்பாரும் யாருமில்லை
பாவிநான் தவிக்கையிலே
கண்ணான கண்மணியே
காலந் தாழ்த்தி வயசுக்கு வா
மண் மீட்கும் காலம் வந்தால்
மகிழ்வுடன் நீ வளர்ந்திடம்மா…//
இது தாலாட்டு மட்டுமில்லை; தவிப்பும்,வலியும்,பயமும் சேர்ந்த வாழ்க்கையை அப்பட்டமாக சொல்லும் அழகான,கருத்துள்ள கவிதை.
வெற்றி பெற வாழ்த்துக்கள் !!!
ஜீவன் கூறியது...
பதிலளிநீக்குபடிப்போர் தூக்கத்தை துரத்தும் தாலாட்டு...!
இதுதான் தியா உண்மை. அத்தனை வலி மிகுந்த வரிகள்
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
நல்ல கவிதை.வாழ்த்துகள்.
பதிலளிநீக்குMohan Kumar கூறியது...
பதிலளிநீக்குவித்யாசமா நல்லா இருக்குங்க
16 டிசம்பர், 2009 10:03 am
// நன்றி Mohan Kumar
கல்யாணி சுரேஷ் கூறியது...
பதிலளிநீக்குரொம்ப நல்லா இருக்குங்க. வலி தந்த போதும் அருமையான கவிதை. வெற்றி பெற வாழ்த்துகள்.
//
உங்களின் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி கல்யாணி சுரேஷ்
பூங்குன்றன்.வே கூறியது...
பதிலளிநீக்கு/காப்பாற்ற நாதியற்று
கலங்கியெல்லோ போயிடுவேன்
பாப்பாரும் யாருமில்லை
பாவிநான் தவிக்கையிலே
கண்ணான கண்மணியே
காலந் தாழ்த்தி வயசுக்கு வா
மண் மீட்கும் காலம் வந்தால்
மகிழ்வுடன் நீ வளர்ந்திடம்மா…//
இது தாலாட்டு மட்டுமில்லை; தவிப்பும்,வலியும்,பயமும் சேர்ந்த வாழ்க்கையை அப்பட்டமாக சொல்லும் அழகான,கருத்துள்ள கவிதை.
வெற்றி பெற வாழ்த்துக்கள் !!!
//
உண்மைதான் பூங்குன்றன்
என்ன செய்வது எண்களின் வாழ்வு வலியுடன் கூடியதாகி விட்டதே.
நன்றி
S.A. நவாஸுதீன் கூறியது...
பதிலளிநீக்குஜீவன் கூறியது...
படிப்போர் தூக்கத்தை துரத்தும் தாலாட்டு...!
இதுதான் தியா உண்மை. அத்தனை வலி மிகுந்த வரிகள்
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
//
நன்றி S.A. நவாஸுதீன்
ஸ்ரீ கூறியது...
பதிலளிநீக்குநல்ல கவிதை.வாழ்த்துகள்.
16 டிசம்பர், 2009 1:11 பம்
//
வாழ்த்துக்கு நன்றி ஸ்ரீ
சோகமான தாலாட்டு... நல்ல மெட்டுடன் பாடினால் நெகிழ்ச்சி தரும்
பதிலளிநீக்குவெற்றி கிடைக்க வாழ்த்துகள்
\\\\கண்ணான கண்மணியே
பதிலளிநீக்குகாலந் தாழ்த்தி வயசுக்கு வா
மண் மீட்கும் காலம் வந்தால்
மகிழ்வுடன் நீ வளர்ந்திடம்மா…\\\\\\\
பெண்பிள்ளை இருந்தால் பெற்றவர்கள்
எவ்வளவு மன உளச்சல்களுக்கு தள்ளப்
படுகிறார்கள் .
அங்கு ஆண்களுக்கும் அப்படித்தான்!
வேறுபாடில்லை
பிள்ளைகள்லென்றில்லை பாவம் செய்து
தமிழாய் .....பிறந்த உயிர்கள். அனைத்தும்
நெகிழ்வான பின்னலில்....துயரம் தொட்டிலில்
சுமையாய் கனக்க....சோகமாய் ஆடுகிறது
உங்கள் கவி
தியா வெற்றி பெற ....வாழ்த்துக்கள்.
உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி. உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்கு...................................
"கண்ணான கண்மணியே
பதிலளிநீக்குகாலந் தாழ்த்தி வயசுக்கு வா
மண் மீட்கும் காலம் வந்தால்
மகிழ்வுடன் நீ வளர்ந்திடம்மா"
என்ன கொடுமை...நல்ல வரி அமைப்பு.
"சிறுக்கி செம சிறுக்கி
சின்னமகள் இவளிருக்க
பொறுக்கி எடுத்த முத்து
வேறெதற்கு உலகினிலே"...
அருமை தியா..
//கண்ணான கண்மணியே
பதிலளிநீக்குகாலந் தாழ்த்தி வயசுக்கு வா
மண் மீட்கும் காலம் வந்தால்
மகிழ்வுடன் நீ வளர்ந்திடம்மா…//
-Super Diya!
//மண் மீட்கும் காலம் வந்தால்
பதிலளிநீக்குமகிழ்வுடன் நீ வளர்ந்திடம்மா…//
அருமை தியா மண் மீட்கும் காலம் வரும்
வெற்றியடைய வாழ்த்துக்கள்
தாலாட்டு தரும் அமைதி தாய்க்கும் தேவை. அமைதி நிலவட்டும். வெற்றி பெற வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குஅருமை தியா..
பதிலளிநீக்குவெற்றி பெற வாழ்த்துக்கள்.
PPattian : புபட்டியன் கூறியது...
பதிலளிநீக்குசோகமான தாலாட்டு... நல்ல மெட்டுடன் பாடினால் நெகிழ்ச்சி தரும்
வெற்றி கிடைக்க வாழ்த்துகள்
//
உங்களின் கருத்துப்பகிர்வுக்கு நன்றி புபட்டியன்
Kala கூறியது...
பதிலளிநீக்கு\\\\கண்ணான கண்மணியே
காலந் தாழ்த்தி வயசுக்கு வா
மண் மீட்கும் காலம் வந்தால்
மகிழ்வுடன் நீ வளர்ந்திடம்மா…\\\\\\\
பெண்பிள்ளை இருந்தால் பெற்றவர்கள்
எவ்வளவு மன உளச்சல்களுக்கு தள்ளப்
படுகிறார்கள் .
அங்கு ஆண்களுக்கும் அப்படித்தான்!
வேறுபாடில்லை
பிள்ளைகள்லென்றில்லை பாவம் செய்து
தமிழாய் .....பிறந்த உயிர்கள். அனைத்தும்
நெகிழ்வான பின்னலில்....துயரம் தொட்டிலில்
சுமையாய் கனக்க....சோகமாய் ஆடுகிறது
உங்கள் கவி
தியா வெற்றி பெற ....வாழ்த்துக்கள்.
//
உங்களின் நீண்ட கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி கலா
adhiran கூறியது...
பதிலளிநீக்குஉங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி. உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்.
...................................
16 டிசம்பர், 2009 5:49 பம்
//
நன்றி adhiran
ஸ்ரீராம். கூறியது...
பதிலளிநீக்கு"கண்ணான கண்மணியே
காலந் தாழ்த்தி வயசுக்கு வா
மண் மீட்கும் காலம் வந்தால்
மகிழ்வுடன் நீ வளர்ந்திடம்மா"
என்ன கொடுமை...நல்ல வரி அமைப்பு.
"சிறுக்கி செம சிறுக்கி
சின்னமகள் இவளிருக்க
பொறுக்கி எடுத்த முத்து
வேறெதற்கு உலகினிலே"...
அருமை தியா..
//
உங்களின் பின்னூக்கத்துக்கு நன்றி ஸ்ரீராம்.
இன்றைய கவிதை கூறியது...
பதிலளிநீக்கு//கண்ணான கண்மணியே
காலந் தாழ்த்தி வயசுக்கு வா
மண் மீட்கும் காலம் வந்தால்
மகிழ்வுடன் நீ வளர்ந்திடம்மா…//
-Super Diya!
16 டிசம்பர், 2009 6:20 பம்
//
நன்றி இன்றைய கவிதை.
thenammailakshmanan கூறியது...
பதிலளிநீக்கு//மண் மீட்கும் காலம் வந்தால்
மகிழ்வுடன் நீ வளர்ந்திடம்மா…//
அருமை தியா மண் மீட்கும் காலம் வரும்
வெற்றியடைய வாழ்த்துக்கள்
16 டிசம்பர், 2009 9:22 பம்
//
உங்களின் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி thenammailakshmanan .
Chitra கூறியது...
பதிலளிநீக்குதாலாட்டு தரும் அமைதி தாய்க்கும் தேவை. அமைதி நிலவட்டும். வெற்றி பெற வாழ்த்துக்கள்.
//
உண்மைதான் சித்ரா வாழ்த்துக்கு நன்றி.
சுசி கூறியது...
பதிலளிநீக்குஅருமை தியா..
வெற்றி பெற வாழ்த்துக்கள்.
17 டிசம்பர், 2009 4:26 அம
//
நன்ன்றி சுசி.
தியா இது தாலாட்டு தானே! பின்னே எப்படி கவிதைப்போட்டிக்கு?? இந்த தாலாட்டுப் பாடலை நிச்சயம் சிங்களப்பெண்கள் பாடமாட்டார்கள்.
பதிலளிநீக்குகாலந் தாழ்த்தி வயசுக்கு வர வேண்டுமளவிற்கு வாழ்க்கை ஆகிப்போனதே.. கொடுமை.
பதிலளிநீக்குஉங்கள் கவிதை அருமை.
வாழ்த்துக்கள்!
இப்படிக்கு நிஜாம்.., கூறியது...
பதிலளிநீக்குதியா இது தாலாட்டு தானே! பின்னே எப்படி கவிதைப்போட்டிக்கு?? இந்த தாலாட்டுப் பாடலை நிச்சயம் சிங்களப்பெண்கள் பாடமாட்டார்கள்.
//
நிஜாம் முதலில் உங்களின் கருத்துக்கு நன்றி.
நிஜாம் இலங்கையில் தமிழரும் இருக்கினம்.
" உழவன் " " Uzhavan " கூறியது...
பதிலளிநீக்குகாலந் தாழ்த்தி வயசுக்கு வர வேண்டுமளவிற்கு வாழ்க்கை ஆகிப்போனதே.. கொடுமை.
உங்கள் கவிதை அருமை.
வாழ்த்துக்கள்!
//
நன்றி உழவன்
வெற்றிபெறும் நம்பிக்கை இருக்கிறது... கவிதை மிக சிறப்புங்க தியா வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஅருமையான கவிதை. பல கதைகள் சொல்கிறது. பல விடயங்களுக்கும் பொருந்துகிறது.
பதிலளிநீக்குமனபாரத்தை வெளிப்படுத்தும் தாலாட்டு.
பதிலளிநீக்குசி. கருணாகரசு கூறியது...
பதிலளிநீக்குவெற்றிபெறும் நம்பிக்கை இருக்கிறது... கவிதை மிக சிறப்புங்க தியா வாழ்த்துக்கள்.
//
உங்களின் வாழ்த்துக்கு நன்றி சி. கருணாகரசு
இலங்கன் கூறியது...
பதிலளிநீக்குஅருமையான கவிதை. பல கதைகள் சொல்கிறது. பல விடயங்களுக்கும் பொருந்துகிறது.
19 டிசம்பர், 2009 6:05 pm
//
நன்றி இலங்கன்
கடையம் ஆனந்த் கூறியது...
பதிலளிநீக்குமனபாரத்தை வெளிப்படுத்தும் தாலாட்டு.
//
உங்களின் கருத்துப்பகிர்வுக்கு நன்றி கடையம் ஆனந்த்.
இதயம் கனக்கும் கவிதை, மகள் பூப்படைவதைச் சீர் சனத்துடன் தந்தை பூரித்து நிற்கும் தமிழர், இன்று பயத்துடன் பார்க்கும் கொடுமை இது. விரைவில் நல்ல நாள் பிறக்கும். நம் வேதனைகளும் தீரும் என்ற நம்பிக்கையுடன்.......
பதிலளிநீக்குஇந்தத் தாலாட்டைப் படித்து முடித்ததும் தூக்கம் அற்றுப் போகிறது. அருமையான வார்த்தை தோரணை !
பதிலளிநீக்குவெற்றி பெற வாழ்த்துக்கள் !
வேதனை நிரம்பிய வரிகள்.
பதிலளிநீக்குவெற்றிபெற வாழ்த்துகள் தியா,வாழ்விலும்.
பித்தனின் வாக்கு கூறியது...
பதிலளிநீக்குஇதயம் கனக்கும் கவிதை, மகள் பூப்படைவதைச் சீர் சனத்துடன் தந்தை பூரித்து நிற்கும் தமிழர், இன்று பயத்துடன் பார்க்கும் கொடுமை இது. விரைவில் நல்ல நாள் பிறக்கும். நம் வேதனைகளும் தீரும் என்ற நம்பிக்கையுடன்.......
21 டிசம்பர், 2009 9:13 அம
//
இது நடக்குமானால் சந்தோசம் நன்றி பித்தனின் வாக்கு
அவனி அரவிந்தன் கூறியது...
பதிலளிநீக்குஇந்தத் தாலாட்டைப் படித்து முடித்ததும் தூக்கம் அற்றுப் போகிறது. அருமையான வார்த்தை தோரணை !
வெற்றி பெற வாழ்த்துக்கள் !
21 டிசம்பர், 2009 11:44 அம
//நன்றி அவனி அரவிந்தன்
அக்பர் கூறியது...
பதிலளிநீக்குவேதனை நிரம்பிய வரிகள்.
வெற்றிபெற வாழ்த்துகள் தியா,வாழ்விலும்.
21 டிசம்பர், 2009 12:35 பம்
//
நன்றி அக்பர்
வேதனை வடிகிறது உங்கள் வார்த்தைகளில்...
பதிலளிநீக்குதியாவின் பேனாவா?... தியாவின் உள்ளமா...?
வேதனையை அருமை என்று சொல்லமுடியாது... அதனால் சொல்லவில்லை... வாழ்த்துக்கள்...
உங்களுக்கும் எனது வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஅருமையான படைப்பு.. வெற்றி பெற வாழ்த்துக்கள் :)
பதிலளிநீக்குவலியின் வரிகள்..வெற்றி பெற வாழ்த்துக்கள்
பதிலளிநீக்கு//மண் மீட்கும் காலம் வந்தால்
பதிலளிநீக்குமகிழ்வுடன் நீ வளர்ந்திடம்மா…//
வலிக்கும் வார்த்தைகள். அற்ப்புதமான கவிதை பரிசு நிச்சயம். பரிசையும் தாண்டி இந்த பாடலில் இருக்கும் வலி படிக்கும் எல்லோரின் மனங்களிலும் இருக்க செய்ததது தான் உங்களின் உண்மையான வெற்றி.