எனது வலையுலகச் சொந்தங்களே ! உங்கள் அனைவருக்கும் எனது உழவர் திருநாளாம் தைப் பொங்கல் மற்றும்.... தை முதல் நாள் வாழ்த்துகள். தை பிறந்து விட்டது அனைவர் வாழ்விலும் புது வழிகள் பிறந்து வலிகள் தீர்ந்து இனிவரும் நாட்களில் வளமாய் வாழ்ந்திட வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். சேற்றில் புரண்டெழும்பி வயல் நிலத்தில் தாளமிட்டு உழுது நல்ல வரப்பிட்டு நெல்லெறிந்து உரம் விதைத்து நிலம் காத்து சொல் பொறுக்காச் சோர்விலராய் கண்ணுறக்கம் ஏதுமின்றி எல்லையிலே காவலிட்டு நெற்கதிர்கள் குனிந்து மண்ணில் கோலமிடும் காலம் வர பக்குவமாய் அறுத்து நல்ல பதத்துடனே சூடடித்து உலகமக்கள் உய்திடவே உழைத்து நல்ல வேர்வை சிந்தி உன்னதமாய் வாழும் எங்கள் நன்செய் மாந்தர்தனை நாளும் நினைத்திடுதல் நலமன்றோ.............. தானுண்ணா வயிறு காய்ந்து தன்நாடு செழித்திடவே பாடுபடும் - அவ் ஏர் பிடித்த கைகளுக்கு பலகோடி வந்தனங்கள்......... நாடு வளம் பெற்று நல்மனிதர் நகரேகி கூடு குலத்துடனே வளம் கொழிக்க வாழ்ந்தாலும் நாடு செழித்திடவே "பாடு"கள் பலசுமந்து காடு வெட்டி நல்ல களனி செய்து ஏர்வழியே தான் நடந்து வேர்வையினை உரமாக்கி நெல்மணிகள் விளைச்சலிடும்