இடுகைகள்

ஆகஸ்ட், 2010 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பசுமை நிறைந்த நினைவுகளே...

படம்
ஒளிக் கதிர்கள் தெளிவற்ற மாலை நேரத்துச் சூரியனோடு கைகோர்த்தபடி என் புழுதித் தெருவில் இறங்கி நடக்கிறேன் வெற்றுக் கால்களோடு …. நீண்ட நெருமுனை … வளைவில் முந்திச் சென்றான் என் பால்ய கால நண்பன்... அவன் இப்போது உயிருடன் இல்லை... சுற்றிவளைக்கப்பட்ட சிறு பகுதியில் இருந்து தப்பிப் பிளைத்து தடுமாறி வரும்போது ஆமி அடித்த செல்லில் உயிர்விட்டானாம் என்று சொல்லக் கேள்வி.... அவனும் நானும் கூடி வயல் விதைப்போம் பள்ளி செல்வோம் பந்தடிப்போம் மாடு மேய்ப்போம் குளத்து வானில் குளித்து மகிழ்வோம்..... அது அந்தக் காலம் இப்போது நான் முழுவதுமாக மாறிவிட்டதாக எல்லோரும் சொல்கிறார்கள் நான் யாருடனும் பேசுவதில்லையாம் சிரிப்பதில்லையாம்... பைத்தியம் என்றும் சிலர் பழியுரைக்கிறார்கள்.... பாவம் அவர்கள்..... அவர்களுக்குத் தெரியாது நான் இப்போதும் என் உறவுகளுடன் நண்பர்களுடன் கனவில் அடிக்கடி சிரித்துப் பேசுவது......

உன் கையின் மகத்துவம்

பல முறை எழுத்துக் கிழித்துப் போட்ட என் கவிதைத் தாள்கள் அனைத்தையும் நீ குப்பை என்று அள்ளிய போதுதான் அவை கவிதை என்ற உண்மை புரிந்தது.

மரித்துப்போன ஆன்மாக்களின் சாட்சியாக...

படம்
ஊ ன்றுகோல் பிடிச்சு நடக்கிறாள் அவள் ஒரு குழந்தை. தந்தையைப் பறிகொடுத்து வருஷம் ஒன்று ஓடிப் போச்சு. குடியிருந்த வீட்டில் எதுவும் மிச்சமில்லை. எதைஎதையோ தின்று நாய் மட்டும் எலும்பும் தோலுமாக தெருவில் திரிகிறது கூடிக் குலாவிய எங்களின் மண்ணில் ரத்த ஆறு ஓடிய சுவடுகளாக இன்றும் தெருக்களில் நம் உறவுகள். முகமிழந்த மனிதர்களாக புலத்திலே நாங்கள் இங்கே. அன்பாய் விசமூற்றும் சிறு பரீட்சையில் சில விசமிகள் எழுத்துலக கோலேந்தியோர் நாமம் சூட்டி கூடப் போகிறார்களாம். ரத்தவாடை நீங்காத சிறு தீவைப் பன்னீர் தெளித்து புனிதமாக்கப் போகிறார்களாம் ... !!! ???