தடுமாறும் இதயம்



அழகு தேவதையே

காதில் தொங்கும் உன்

காதணிகளின் சுமையை

தூக்கி நடப்பது

அழகோ அழகு

அதுசரி பெண்ணே

நீ

தெய்வ மங்கையா?

அல்லது அழகிய மயிலா?

அதுவுமில்லையேனில்

மானிடப் பெண்ணா?

உன்னை

யாரென்று

சொல்ல முடியாதபடி

தடுமாறுகிறது

என் நெஞ்சம்.




"அணங்கு கொல்ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர் மாளும் என் நெஞ்சு"


-திருக்குறள்-

கருத்துகள்

  1. //காதணிகளின் சுமையை

    தூக்கி நடப்பது

    அழகோ அழகு//

    நல்ல ரசணை

    பதிலளிநீக்கு
  2. தியா

    அழகு மங்கை பற்றி அழகு கவிதை , நல்லாருக்கு தியா

    ஜேகே

    பதிலளிநீக்கு
  3. அருமையான ரசனை தியா.... நல்லாருக்கு கவிதை.

    பதிலளிநீக்கு
  4. ருத்ர வீணை®
    வானம்பாடிகள்
    சே.குமார்
    sakthi
    சுசி
    Chitra
    இன்றைய கவிதை
    மா.குருபரன்


    உங்கள் அனைவரது பின்னூட்டத்துக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  5. ஆஹா... திவ்யம் என்று சொல்ல வைத்த மற்றொரு திருக்குறள் விளக்கம்...

    மிக மிக அருமை தியா அவர்களே...

    உங்களின் கற்பனை திறமையை கண்டு வியந்தேன்... அதற்காக ஒரு ஸ்பெஷல் பாராட்டு.

    பதிலளிநீக்கு
  6. தேனம்மை லெக்ஷ்மணன்
    R.Gopi
    உங்கள் அனைவரதும் கருத்துக்கு நன்றி

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....

அன்புடன்
-தியா-

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.2. ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

2.2. ஆரியச்சக்கரவர்த்திகள் கால இலக்கியங்களின் சிறப்பியல்புகள் (பண்புகள்)