காதல் எழுதப்படாத விதி...


ஒரு அமைதியான மாலை நேரம்
நட்சத்திரங்கள்
மற்றும்
மெழுகுவர்த்தி...
அலைகளின் ஒலி
மிகவும் இறுக்கமான
நடைப் பயணம்

நம் நிழல்கள்
மணல் தரையில்
கூடவே...
தீவிரமாக ஒருவருக்கொருவர்
இன்னும்
அதி தீவிரமாக
கைப் பிடித்து
நெருக்கமாக....

நவ நாகரிக உலகத்தில்
காதல் எழுதப்படாத விதி...
காற்று ஊடுருவி
நெருக்கமான நேரத்தில்
ஒன்றும் ஒப்பிட்டுக்கொள்ள முடியாது

நாம் சந்தித்து வந்ததிலிருந்தே
என்னுடைய எண்ணங்கள்
அவளால் மாற்றம் பெற்றுள்ளன
என் இதயம்
மனம் மற்றும் உடல்
இன்னும்....

நான்
எப்போதும் உன்னுடன்
இருக்க
வேண்டும்
நீ
என் வாழ்வின்
ஊற்றாக
இருக்கிறாய்
அழகான
மற்றும் விலைமதிப்பற்ற
என் சொத்து நீ...
நீ என் மனைவி







கருத்துகள்

  1. காதல் என்பது ஒருதவம் காதல் என்பது ஒரு இனிய பயணம் இந்த இனிய பயணத்தை வலியில்லாமல் தொடர காதல் தேவைதான் பாராட்டுகள் உங்கள் ஆக்கத்திற்கு .

    பதிலளிநீக்கு
  2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  3. //நாம் சந்தித்து வந்ததிலிருந்தே
    என்னுடைய எண்ணங்கள்
    அவளால் மாற்றம் பெற்றுள்ளன// அருமையான கவிதை தீபண்ணா... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  4. அருமையான வரிகள். வாழ்த்துகள் நண்பரே

    பதிலளிநீக்கு
  5. இதை விட அழகாக மனைவியை போற்ற இயலுமா தியா அருமை

    நன்றி
    ஜேகே

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....

அன்புடன்
-தியா-

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.2. ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

2.2. ஆரியச்சக்கரவர்த்திகள் கால இலக்கியங்களின் சிறப்பியல்புகள் (பண்புகள்)