இடுகைகள்

ஏப்ரல், 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வ(ச)ந்த காலம் மாற்றம்

படம்
என்னுடைய இந்தக் கவிதை அமெரிக்காவின் மின்னெசோட்டா மாநிலத் தமிழ் இதழான  பனிப்பூக்கள் இதழின்  04/16/2013  http://www.panippookkal.com/ithazh/%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/   அன்றைய பதிப்பில் வெளிவந்தது  நேற்றைய மாலைப் பொழுதில் என் வீட்டு முற்றத்தில் இரு சிறு குருவி துளிர்விட்ட பசும்புல்லில் தீனி பொறுக்கி குதூகலித்துக் கலவிகொண்டு மகிழ்ந்திருந்தன. . வசந்தகாலத்தின் வரவுக்கண்டு மரங்கள் குருத்தெறிந்து மொட்டுவிட்டுக்  கருத்தரிக்க கொட்டும் மழையில் தலை கழுவிச் சீவி முடித்துச் சிங்காரித்து அம்மணமாக நின்றன. வீதியில் தொடை தெரிய நடைப் பயணம் போனாள்  ஒரு யுவதி. தெருமுனைப் பூங்காவில் குதூகலத்தில் சில சிறுவர். கடிகாரச் சிறு முள்ளின் ஒரு வட்டச் சுற்றுக்குள் பெரு மாற்றம் வெண்பனிப் போர்வைக்குள் உடல் புதைத்து பதுங்கிக் கொண்டது பசுந்தரை ஒளியும் இருளும் கலந்த எங்கள் நெடுஞ்சாலை தொடர்ந்து பொழியும் வெண்பனியில் கருஞ்சாயம் போக்கி மீண்டும் வெ

குழந்தை மனசு

படம்
*******என்னுடைய இந்தச்  சிறுகதை அமெரிக்காவின் மின்னெசோட்டா மாநிலத்தின் தமிழ் சஞ்சிகையான பனிப்பூக்கள்   http://www.panippookkal.com/ithazh/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%9A%E0%AF%81/ இதழின் இன்றைய பதிப்பில் வெளிவந்துள்ளது. ***** விமானம் கிளம்புவதற்கு இன்னும் அரைமணி நேரமாவது ஆகும் என்பதால் அதுவரை இருக்கையில் இருக்க மனமில்லாமல் எழுந்து என் கைப் பையில் இருந்த புத்தகங்களில் ஒன்றை எடுத்துப் படிக்கத் தயாரானபோது என் மகள் குறுக்கிட்டாள்.   “அப்பா இன்னும் எவ்வளவு நேரத்திலை நாங்கள் யாழ்ப்பாணத்துக்குப் போகலாம்”   “இன்னும் ரெண்டு நாள் ஆகுமட செல்லம்…”   “ரெண்டு நாளோ… அப்ப  இண்டைக்கு திங்கள்… செவ்வாய்… புதன் கிழமை நாங்கள் யாழ்ப்பாணத்திலை நிப்போம் என்னப்பா…”   நான் ஆம் என்பதற்குப் பதிலாகத் தலையை ஆட்டினேன். அவளும் அப்படியே அமைதியாகி விட்டாள்.   இரண்டு மூன்று வாரங்களாக எமது தாய்நாட்டில் இருக்கும் உறவுகளின் புகைப்படங்கள், ஒளிப் படங்களைத் திரும்பத் திரும்பப் பார்த்து அவர்களைத் தன் மனதில் ஞாபகப்படுத்திப் பத்திரப் படுத்

நாடோடி நான்...

இன்று   எனக்கு   துக்கமான   நாளா   மகிழ்ச்சியான   நாளா   என்று   எதுவுமே   புரியவில்லை ...   எனது   நண்பர்களில்   ஒருவர்   இன்றுடன்   ஓய்வுபெறப்   போகிறார் .   அவருக்கு   எழுபது   வயதாகின்றது .   ஆனால்   ஓர்   இளைஞனுக்கு   இருக்க   வேண்டிய   அனைத்து   சுபாவங்களும்   நிறைந்த   ஓர்   அற்புதமான   மனிதர்   அவர் . இளமையான   வேகம் ...   துல்லியமான   பார்வை   வீச்சு ...   பரந்த   அறிவு ...   கண்ணியமான   நட்பு ...   இளமையான   உணர்வுகள்   அனைத்தும்   ஒருங்கே   கூடியவர் ...   அவர்   மெக்சிக்கோ   நாட்டைச்   சேர்ந்தவர் .   பொதுவாக   அழகான   பெண்களை   " ஏஞ்சல் "   என   அழைப்பார்கள்   ஆனால்   அவரின்   பெயர்   " ஏஞ்சல் " . எமது   ஓய்வறையில்   நாம்   என்றும்   நால்வர்தான்   ஒன்றாக   இருப்பது   வழக்கம்   இன்றிலிருந்து   அது   மூவராகக்   குறைகிறது   என   நினைக்கும்   போது   மிகவும்   கவலையாக   உள்ளது . இன்னொருத்தர்   எதித்திரியா   நாட்டைச்   சேர்ந்தவர் .   நல்ல   அரசியல்   ஞானம்   படைத்த   பேச்சாளர்கள்   கூட   அவருடன்   வாதம்   செய்தால்   தோற்றுப்போவது   நிச்சயம்