அரசியலில் இதெல்லாம் சகசமப்பா…

arasiyal_520x367
முடிந்தால் கட்டு
கட்டினால் இடி
முடிந்தவரை மௌனமாயிரு
உரத்துக் குரல்கொடு
ஆளுறக்கம் போல் நடி
வீழும்வரை பொறுமை கொள்
வீழ்ந்தபின் உரக்கக் கத்து
அன்பாய்ப் பேசு
வாய்ச்சொல்லை நஞ்சாய்க் கக்கு
அன்பாய் வருடு
முதுகில் குத்து
நல்லவன்போல் இரு
வேடம் போடு
பழிவாங்கப் பழகு
பாவம் பண்ணத் துணி
காவலனாய் நடி
பழிக்கு அஞ்சாதே
நண்பனைப் பகை
பகைவனைத் துணைசேர்
காலப்போக்கில் நீயும்
நாட்டை ஆள்வாய்
-தியா-

http://www.panippookkal.com/ithazh/

கருத்துகள்

  1. ஹா..ஹா... ஹஹஹஹா... மேடையேறிப் பேசும் போது ஆறு போலப் பேச்சு...! (2) கீழே இறங்கிப் போகும் போது சொன்னதெல்லாம் போச்சு...! (2) காசை எடுத்து நீட்டி, கழுத பாடும் பாட்டு... ஆசை வார்த்தை காட்டு, உனக்குங்கூட ஓட்டு ஹஹஹா... சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்கச் சிரிக்க சிரிப்பு வருது... சின்ன மனிசன் பெரிய மனிசன் செயலைப் பாக்க சிரிப்பு வருது...! (படம் : ஆண்டவன் கட்டளை)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //முடிந்தவரை மௌனமாயிரு// என்பதை அடுத்த வரியில்
      //உரத்துக் குரல்கொடு// என்ரு வருவது முரண். இன்னும்//பகைவனைத் துணைசேர்
      காலப்போக்கில் நீயும்
      நாட்டை ஆள்வாய்// என்பது கவிதைக்கு வெளியான குரலாக ஒலிக்கிறது. அது இல்லாமலேயே இருந்திருக்கலாம். பாரட்டுக்கள்.

      நீக்கு

கருத்துரையிடுக

இதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....

அன்புடன்
-தியா-

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.2. ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

2.2. ஆரியச்சக்கரவர்த்திகள் கால இலக்கியங்களின் சிறப்பியல்புகள் (பண்புகள்)