இடுகைகள்

ஜூலை, 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மேய்ப்பனை இழந்த மந்தைகள்

படம்
காட்டுமிராண்டித்தனமாகவும் நயவஞ்சகமாகவும் எம் முன்னோர்கள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் அனைத்துமே மாறிப்போனது. மக்கள் அனைவரும் கொடிய விலங்குகளிடையே சிறைப்பட்டுக் கொண்டனர். எங்கள் மண்ணில் நாங்கள் தலை நிமிர்ந்து நடக்கும் உரிமை மறுக்கப்பட்டது கனவான்களாகவும் கடவுளர்களாகவும் எங்களில் தங்களைத் திணித்தபடி எங்கள்மேல் தங்கள் வன்மங்களை கொட்டித் தீர்க்க முடிவெடுத்த பின்னர் மீட்பர்கள் என்று தம்மைத் தாமே அழைத்தபடி எம்மைச் சூழ்ந்து கொண்டனர். காலம் கடந்த பிறிதொரு நாளில் மறைந்திருந்து பாணங்கள் ஏவுவதில் வல்லவர்கள் மீண்டும் நாவாய்கள் ஓட்டி புதர்களைக் கடந்து கரையைத் தொட்டனர். நஞ்சு தடவிய பாணங்கள் நடுவில் பிஞ்சுகள் கூட வெந்து வதங்கினர். வன்மங்கள் கொட்டி மீளமுடியாத ரணங்களை மட்டுமே தரமுடிந்த அவர்களால் சிதளூரும் காயங்கள் மட்டுமே நிலைபெற்றன. புண்ணாகிப் போன நெஞ்சுகள் கனம் தாங்காமல் வெந்து வதங்கின. அன்று – போரின் கனத்த குரலுக்கு மத்தியிலும் ஒரு பெரு வாழ்வு இருந்தது அனேகமாக எல்லாரும் போனபின்னர் எல்லாமே கனவாகிப் போனது. இரைச்சல் மட்டுமே மீதமாகிய இன்றைய வாழ்வில்