அன்னை மண்ணே
அன்னை மண்ணே. அன்னை மண்ணே! சோகம் தீர்ப்பாயா எம் சோகம் தீர்ப்பாயா? கண்ணில் சிந்தும் பூக்கள் தூவி பாதம் பணிகின்றோம் – உன் பாதம் பணிகின்றோம் துடுப்பை இழந்த படகாய் எங்கள் வாழ்க்கை போனதம்மா வலிகள் சுமந்து புது வழிகள் தேடி விழிகள் அலைவதேனோ – எங்கள் மொழிகள் இழந்து மௌனியாகி வாயும் மூடியதேன்? யுத்தம் விளைந்த பூமியில் நாங்கள் செத்துப் பிழைக்கின்றோம் – தினம் ரத்தம் சிந்தி கொட்டும் போர் மழையில் செத்து மடிகின்றோம்! உண்ண உணவு இன்றி நாங்கள் வாடை மெலிகின்றோம் – எங்கள் சோகம் தீர்ப்பார் யாரும் இன்றி வலிகள் சுமக்கின்றோம் வீரம் விழைந்த எங்கள் வம்சம் விதையாய் வீழ்ந்ததேனோ வீணர் கூட்டம் நடுவில் நாங்கள் சிறையில் போனதேனோ காலம் பின்னிய வலையில் எங்கள் கால்கள் சிக்கியதேன் கண்ணீர் மழையால் பூமி நனைத்துக் கலங்கி நிற்பதுமேன் பாசம் காட்ட இளம் தோழர் கூட்டம் புயலாய் கிளம்பியதே! வரும் நாளை இந்த உலகப் பரப்பில் உரிமைக் குரலாய் அவர்கள் நிலைத்திடுவர்! காலம் கனியும் போது நாங்கள் வழமாய் வாழ்ந்திடுவோம்! அந்தக் காலம் வேண்டி நாங்கள் உன் கால்கள் பணிகின்றோம்! தாயே தமிழ் நாடே உந்தன் கால்கள் பணிகின்றோம்! -தியா-