முதல் பாகம் அவளும் நானும் மத்தியானச் சாப்பாடு பதினோரு மணிக்கே முடிந்தாகி விட்டதனால் பயண முன்னேற்பாடாக என் துணைவி, பாத்திரங்களைக் கழுவி வைப்பதிலும் மற்றும் சில பல துப்புரவு வேலைகளிலும் மும்முரமாக ஈடுபட்டிருந்தாள். ஒரு மாத காலப் பயணம் என்பதனால் தண்ணீர் லீக் ஆகி “பேஸ்ட்மென்ட்” பழுதாகி விடுமோ என்ற பயம் எனக்கு… அதனால் வீட்டை விட்டுக் கிளம்புவதற்கு முன்னதாக முழு வீட்டுக்குமான வாட்டர் சப்ளையை “சட் ஆஃப் ” செய்துவிடும் முனைப்பில் இறங்கியிருந்தேன். “நேரம் வேற போகுது இன்னும் ரெடியாகலையா…” பிள்ளைகளை அதட்டும் மனைவியின் குரல் கேட்டது. “யெஸ் ஐம் ரெடி…” என்றான் மகன் “மீ… டூ…” என்றாள் மகள் “அப்பா எங்கே…?” விசாரிப்பு கொஞ்சம் கடுமையாக இருந்தது “ஹீ இஸ் இன் த பேஸ்மெண்ட்…” என்றாள் மகள் “ஹீ இஸ் ஷட்டிங் டவுன் த வாட்டர்…” என்றான் மகன் “ஏன் உங்களுக்குத் தமிழ் தெரியாதோ…” மீண்டும் அதட்டும் மனைவியின் குரல் கேட்டது “யெஸ் வி நோ தமிழ்” என்றாள் மகள்........ தயவு செய்து இந்த இணைப்பில் சென்று அழகிய ஐரோப்பா 2 தொடரைப் படியுங்கள் அன்புடன்... தியா