அழகிய ஐரோப்பா - 7
அழகோ அழகு மியூசியத்தை விட்டு வெளியே வந்ததும் பிள்ளைகளுக்கு பழரசம் வாங்கிக் கொடுத்துவிட்டு நாங்கள் டீ குடித்தோம். ஆங்கிலேயர்களின் டீ நல்ல சுவையுடன் இருந்தது. சிறு நடைப்பயணத்தின் பின்னர் ரெயில் ஸ்டேஷனை வந்தடைந்தோம். இப்போது கூட்டம் வெகுவாக குறைந்திருந்தது. இரண்டு நிமிட ரெயில் பயணத்துக்கு பின் இறங்கி வலப்புற வாசல் வழியாக வெளியேறினோம். கிட்டத்தட்ட மரங்கள் நிறைந்த சோலை போலவும் காடு போலவும் உள்ள ஒரு இடத்தில் நடை பாதை இருந்தது. மற்றவர்களை பின்தொடர்ந்து நாமும் நடந்தோம். கிட்டத்தட்ட இருநூறு மீட்டர் தூரம் போனதும் பிரமிக்க வைக்கும் அழகுடனும் மிடுக்குடனும் எம்முன்னே தோன்றியது பக்கிங்காம் அரண்மனை. உலகம் முழுவதையும் தன் கைப் பிடிக்குள் வைத்திருந்த பெரும் சாம்ராச்சியம் என் கண் முன்னே விரிந்து கிடந்தது. உலகின் வயதான ராணி வாழும் அரண்மனை முன் நிற்கிறோம் என்ற பெருமை எனக்குள்… என்னதான் மாளிகை முன் நின்றாலும் அந்த மாளிகையின் மூடிய கம்பி கதவு வழியாகத்தான் அந்த மாளிகையின் வெளித்தோற்றத்தைக் காண முடியும். உள்ளே செல்ல முடியாது. வெளியே நின்ற மக்கள் தங்கள் போன்களிலும் கேமரா விலும்