இடுகைகள்

அக்டோபர், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

காலத்துயர்

படம்
காலத்தைச் சபித்தபடி அதைக் கட்டித் தழுவினாலும் அது நகர்ந்து கொண்டேதானிருக்கும். ஏனோதான் அவன் பிரிந்த நேரம் அவனுக்குள் அப்படியே நிலைத்து நின்றுவிட்டது. தனிமை உணர்வைச் சதா புதுப்பித்துக்கொண்டே இருந்தது. உலகின் ஏதோ ஒரு மூலையில். எங்கோ ஒரு நாட்டில். தன்னுடைய வாழ்வு இப்படிப் போகுமென்று அவன் கனவு கூடக் கண்டதில்லை. ஒரு காகத்தின் கரைதல். சேவலின் கூவல். குருவிகளின் சங்கீத ஓசை. குயில்களின் இனிய பாடல் எதுவுமேயற்ற ஒரு பாலைவனச் சிறையில் அவனுடைய வாழ்வு. வெளிச்சமென்றால் என்னவென்று புரியாத யன்னலற்ற நான்கறைச் சுவரினுள் ஒவ்வொரு இரவுகளும் பேரிரைச்சலாக விரட்ட. மௌனப் பூதங்களுடன் அவனுடைய வாழ்வு. இனம்புரியாத ஒரு மரணப் பீதியுடன் வேற்று நாட்டுச் சூழலில் தனக்குத் தெரிந்த ஓரிரு ஆங்கிலச் சொற்களில் பேசிக் கொடுப்பதை உண்டு, குடித்து, உறங்கி, கண்ணீர் வடித்துக் காலத்தைக் கடத்திக் கொண்டிருந்தான். வாழ்க்கையைப் பல கோணங்களினூடாக பார்த்த அவனுக்கு இது ஒன்றும் புதிய விடயமில்லைத்தான் ஆனாலும் இதுவரை நிகழ்ந்த எல்லாத் துன்ப துயரங்களுக்கும் அருகிலிருந்து பங்கெடுத்த தோழ் கொடுத்த அவன் குடும்பம் இப்போது அவனுடன் இல்லை என்பதும் அவன் எந

பிரியாவிடை

படம்
நேற்றைய இரவுச் செய்தியில் சொன்னது போலவே இன்று அதிகாலையில் இருந்து பனிப்பொழிவு கொஞ்சம் அதிகமாகவே  இருந்தது. வழமைக்கு மாறாக எனது கார் மிகவும் மெதுவாக ஊர்ந்தபடி போய்க்கொண்டிருந்தது. காரின் வெப்பமானியில் அப்போதைய வெப்பநிலை -37F எனக் காட்டியது. அமெரிக்காவுக்கு வந்த இந்தப் பத்து வருடத்தில் இருந்து இந்தப் பாதையால்தான் வழமையாக நான் வேலைக்குப்  போய் வருவது வழக்கம். தினசரி போய்வரும் பாதை என்பதால் கண்ணை மூடிக்கொண்டு காரை ஓட்டினாலும் வலம் - இடம், சந்திச் சிக்னல்,  மேடு - பள்ளம் எல்லாம் தாண்டிப் பதினேழு நிமிடங்களில் வேலையில் இருப்பேன். இருந்தாலும் இன்றைய பனிப் பொழிவு இன்னும் கொஞ்சம் கூடிய எச்சரிக்கை தேவை என்பதை என் மண்டைக்குள் அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தது.     அந்தப் பிரபலமான தொழிற்சாலையில் என்ஜினியரிங் மானேஜராகச் சேர்ந்து ஒரு வருடம்தான் ஆகியிருந்தது. மிகவும் புகழ் போன கம்ப்யூட்டர் ஹார்ட்வேர் கம்பெனி அது. அதிகாலை ஐந்து மணிக்கு வீட்டில் இருந்து நான் வேலைக்குக் கிளம்பி விடுவது வழக்கம். இந்தப் புதிய பொறுப்புக்கு வந்த நாளில் இருந்து என் வீட்டு அலாரம் கொஞ்சம் வேகமாகவே செயற்பட ஆரம்பித்திருந்தது.    இந

கடவுளின் குழந்தை

படம்
முந்தைய இரவின் மெல்லிய பனித் தூறலிலும் சில்லென்று வீசும் காற்றிலும்  மெல்லிதாக அவனுக்கு குளிரத் தொடங்கியது. ஆனாலும் அவனது நோக்கம், எண்ணம் எல் லாம் அந்த வீடு பற்றியதாக இருந்தமையால் அவன் எதையும் பொருட்படுத்தாதவனாக நடக்கிறான். இன்னும் அந்த வீட்டில் யாரோ இருக்கிறார்கள் என்பதற்கான அடையாளமாக  மெழுகுவர்த்தியோ அல்லது ஏதோ ஒன்றின் வெளிச்சத்தில் இரண்டு உருவங்கள் அங்கும் இங்குமாக அசையும் விம்பம் மட்டும் யன்னலூடாகத் தெரிந்தது.  *** பனிக்காலம் முடிந்து வசந்த காலம் வந்துவிட்டது. இன்னும் அந்த வீட்டில் வசந்த காலத்துக்குரிய எந்த விதமான அறிகுறியும் தெரியவில்லை. பனிப்பொழிவு தொடங்கிய இந்த ஆறு மாத காலத்தில் ஒரு தடவை கூட அவளைக் காணவில்லை என்பதும் இதற்கான காரணங்களில் ஒன்றாகியது. அவள் ஒரு சிறு குழந்தை பனிப்பொழிவு குறைந்த இந்த இரண்டு மாதத்தில் இருந்து அந்தச் சிறு மழலையின் கையசைப்புக்காகக் காத்திருக்கிறான்.  அவளுக்கு மூன்று அல்லது நான்கு வயது இருக்கலாம். கடந்த வருடம் பனிப் பொலிவுக்கு முன்னர் ஒரு மாலைநேரக் கையசைப்புடன் கலைந்து போனது அந்தச் சிறு பூவின் கையசைப்பு.  நேற்று,  இன்று, நாளை என நாட்களை எண்ணிக் கொண்டிருந்