பாடசாலை ஆரம்பமாகிறது
இன்று புதன்கிழமை
ஜனவரி 3 ஆம் நாள்
விடுமுறையின் பின் - மீண்டும்
பாடசாலை ஆரம்பமாகிறது
நேற்றைய இரவில் எம்மகன்
புத்தகப் பை - சாப்பாட்டு பை
சப்பாத்துக்கள் - குளிர் ஜாக்கெட் எல்லாம்
சரிபார்த்து எடுத்து வைத்தான்
ஆனாலும் இன்று
அவனுக்குள் கொஞ்சம்
அலுப்புத் தட்டியது
அலாரம் ஆறு தடவை
அடித்து ஓய்ந்த பின்னும்
கண்களை இறுக்க மூடி
இன்னும் பிடிவாதம் கொள்கின்றான்
சற்றுக் கோபமாக அம்மா வந்து
அறைக் கதவைத் தட்டினார்
“சீக்கிரம் எழுந்திடு” அம்மாவின் கண்டிப்பு
போர்வைக்குள் சிரித்தபடி அவன்
“இன்னும் ஐந்து நிமிடங்கள்” என்றான்
அம்மாவின் ஒழுக்கவிதியில்
தாமதம் என்பது பெரும் குற்றம்
யன்னல் திரையை இழுத்து விட்டாள்
வெளிச்சத்தின் முக்கோணங்கள்
அவனின் போர்வையை ஊடுருவின
போர்வையை விலக்கி
கடிகாரத்தைப் பார்த்தான்
“நேரம் போய்விட்டது
ஏன் சீக்கரமாய் எழுப்பவில்லை”
செல்லச் சிணுங்கலுடன்
குளியலறைக்குள் ஓடினான்😁
அம்மாவின் ஒழுக்க விதிகளில் தாமதம் பெருங்குற்றம்..ஆமாம் உண்மை தானே..சோம்பல் முன்னேற்றத்தைக் கெடுத்து விடும்.நானும் நிகேயின் பக்கம் தான்.
பதிலளிநீக்கு